For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக மாஜி எம்எல்ஏ சுட்ட தங்க புதையல்: போலீஸில் மகள் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோவில் திருப்பணியின்போது கிடைத்த தங்கப் புதையலை திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியம் மறைத்து விட்டதாகஅவரது மகளே போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் வி. சுப்பிரமணியம். இவரது மகள்வழக்கறிஞர் பாண்டிமாதேவி. இவர் முதல்வர் ஜெயலலிதா, டிஜிபி அலெக்சாண்டர் ஆகியோருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார்.

அதில், உளுந்தூர்ப்பேட்டை தாலுகா வண்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் மற்றும் மழையம்மன் கோவில்ஆகியவற்றில் கடந்த 1980ம் ஆண்டு திருப்பணி நடந்தது.

அப்போது இரு கோவில்களுக்கும் எனது தந்தையும், அப்போதைய எம்.எல்.ஏவுமான வி. சுப்பிரமணியம்தான் தர்மகர்த்தாவாகஇருந்தார். மழையம்மன் கோவில் திருப்பணியின்போது பள்ளம் தோண்டினார்கள். அப்போது, சில உலோகப் பொருட்கள்இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இரவில் எனது தந்தை அந்த இடத்தைத் தோண்டி, பூமிக்குள்ளிருந்து பஞ்சலோகத்தால் ஆன பானை ஒன்றைஎடுத்தார். அதில் தங்க நாணயங்கள் இருந்தன.

அதே போல ஈஸ்வரன் கோவிலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்திலிருந்து தங்க பிஸ்கட்கள் அடங்கிய பெட்டி கிடைத்தது. இதைமண் தோண்டிய இரண்டு தொழிலாளர்கள் எடுத்துச் சென்று விட்டனர். இதை தெரிந்து கொண்ட எனது தந்தையார் அவர்களைமிரட்டி 70 பிஸ்கட்களையும் பறிமுதல் செய்து கடலூரில் உள்ள எங்களது வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.

பள்ளம் தோண்டியபோது கிடைத்த வேறு சில கலைப் பொருட்களை அரசிடம் ஒப்படைத்த எனது தந்தையார் தங்கக் காசுகள்,பிஸ்கட்களை மட்டும் கொடுக்காமல் மறைத்து விட்டார்.

இந்தத் தங்கப் புதையலில் ஒரு பகுதியை கடந்த 1980-81ல் வள்ளிவிலாஸ் என்ற நகைக் கடையில் விற்று விட்டார். அதில்கிடைத்த தொகையை எங்களது பெயரில் கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்தார். மற்றொரு பகுதியை 1980, 85, 89ம் ஆண்டுசட்டசபைத் தேர்தலின்போது செலவு செய்தார்.

கடந்த ஆண்டு என்னையும், எனது சகோதரர்களையும் அழைத்த அவர் அசையாச் சொத்துக்களுக்குப் பதில் தங்க பிஸ்கட்களைவிற்று அதிலிருந்து கிடைத்த ரூ. 24 லட்சம் பணத்தை ஆளுக்கு 8 லட்சமாகப் பிரித்துத் தருவதாக கூறினார். ஆனால் அதைநாங்கள் ஏற்க மறுத்து விட்டோம்.

சட்டவிரோதமாக நடந்து கொண்டுள்ள எங்களது தந்தை மீது போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்சிரீதியாக தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் தப்பிக்க நினைக்கிறார். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் எம்எல்ஏவின் மகள் பாண்டிமாதேவி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X