For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட்: ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக

By Staff
Google Oneindia Tamil News

ராஞ்சி:

ஜார்க்கண்டில் மீண்டும் ஆட்சியமைக்க தங்களை அழைக்க வேண்டும் என்று கோரி பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணித் தலைவர்கள்இன்று 41 எம்.எல்.ஏக்களுடன் சென்று ஆளுநர் சையத் ராஸியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

இங்கு ஆட்சியமைக்க 41 எம்.எல்.ஏக்களே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கூட்டணியின் சார்பில் முதல்வர் பதவிக்கு மத்திய அமைச்சரும் ஜார்க்கண்ட் முக்திமோச்சா தலைவருமான சிபு சோரனை முன்னிருத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வென்றிருந்தாலும் தனித்து ஆட்சியமைக்கபோதிய பலம் இல்லை. இதனால் அங்கு காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோச்சா- லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா கட்சி கூட்டணிஆட்சியமைக்க முயன்று வருகிறது.

81 இடங்கள் கொண்ட சட்டமன்றதில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. இங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம்கூட்டணிக்கு இம்முறை 36 இடங்களே கிடைத்துள்ளது. இதில் 30 பேர் பா.ஜ.கவினர், 6 பேர் ஐக்கிய ஜனதா தளத்தினர்.

இந்தக் கூட்டணிக்கு 5 சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களையும் அழைத்துக் கொண்டு மொத்தம் 41எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை சந்தித்தனர் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் தலைவர்கள்.

தங்களிடம் போதுமான எம்எல்ஏக்கள் இருப்பதால் மீண்டும் ஆட்சியைமக்க தங்கள் கூட்டணியை அழைக்க வேண்டும் என அவர்கள்கோரினர்.

காங்கிரஸ்- மத்திய அமைச்சர் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கூட்டணி 26 இடங்களில் வென்றுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம்7 இடங்களில் வென்றுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகள், 2 சுயேச்சைகள் இக் கூட்டணியுடன் உள்ளனர். இதனால் இக்கூட்டணிக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. மேலும் சில சுயேச்சைகள் உதவியுடன் ஆட்சியைப் பிடிக்க இக் கூட்டணி திட்டமிட்டது.

அதற்குள் 5 சுயேச்சைகளையும் வளைத்துவிட்டது பாஜக-ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி. இதனால் இந்த சுயேச்சைகளை மீண்டும் தங்கள்பக்கம் இழுக்கும் வேலையில் காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி இறங்கவுள்ளது.

இம் மாநிலத்தில் சிபுசோரனை முதல்வராக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அவரை சட்டமன்றத்தின் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்திமோச்சா கூட்டணியின் தலைவராகத் தேர்வு செய்ய இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி இன்று தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X