For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி குறித்து வளர்மதி பேச்சு: அவையிலிருந்து பரிதி வெளியேற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டமன்றத்தில் திமுக தலைவர் குறித்து அமைச்சர் வளர்மதி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக குரல் கொடுத்த பரிதி இளம்வழுதி அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

சட்டசபையில் ஊரகத் தொழில்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் வளர்மதி திமுகதலைவர் கருணாநிதியை மறைமுகமாக போட்டு வாங்கினார்.

அவர் பேசுகையில்,

அரசுக்கு எதிராக குற்றம் கண்டுபிடித்து, சிறு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஊதி ஊதி பெரிதாக்கும் தலைவர்கள்இருக்கிறார்கள். இந்த வித்துவான்கள் 5 சொட்டு கண்ணீரை விட்டுவிட்டு ரத்தம் குடிக்க அலைகிறார்கள்.

(மத்திய அமைச்சர் இளங்கோவன் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இசை வேளாளர் ஜாதியைக் குறிப்பிட்டு, கருணாநிதிபிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்குவார் என்று கூறி பிரச்சனையானது நினைவுகூறத்தக்கது)

சுனாமி வந்தபோது பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காமல் ஆஸ்பதிரிக்கு ஓடி படுத்துக் கொண்டார்கள். ஆனால் கொளுத்தும்வெயிலிலும் கோட்டையை நோக்கி கொடி பிடிக்க வருவார்கள்.

வாரிசுக்கு பட்டம் சூட்டவாரி சுருட்டிக் கொண்டு திண்டுக்கல் செல்கிறார்கள். உடல் நிலை சரியான பிறகும் கூட பாதிக்கப்பட்டமக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை.

ஆனால், எங்கள் தலைவி, புரட்சித் தலைவி, இதய தெய்வம், டாக்டர் அம்மா அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை பலமுறைசந்தித்து ஆறுதல் கூறினார் என்றார்.

வளர்மதி பேசப் பேச திமுகவினர் வெகுண்டெழுந்து அவருக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள்பதிலுக்கு குரல் எழுப்பினார்கள்.

அப்போது பேசிய ஆற்காடு வீராசாமி: எங்கள் தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் கூட தன்னைச்சந்தித்த சோனியா காந்தியிடம் தமிழகத்துக்குத் தான் நிதி உதவி கேட்டார். அவரிடம் சுனாமி நிவாரணத்துக்கு ரூ. 1 கோடிகொடுத்தார் என்றார்.

அப்போது இடைமறித்த முதல்வர் ஜெயலலிதாவும், அமைச்சர் ஜெயக்குமாரும், வளர்மதி யாரையுமே பெயர் சொல்லிக்குறிப்பிட்டு பேசவில்லையே. பின்னர் ஏன் திமுகவினருக்கு கோபம் வருகிறது என்று கேட்டார்.

ஜெயலலிதா பேசுகையில், அவையின் பொன்னான நேரத்தை ஆற்காடு வீராசாமி வீணடித்துக் கொண்டிருக்கிறார். அமைச்சரவைபேச விடாமல் இடைமறிக்கிறார் என்றார்.

அப்போது எழுந்த திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி, முதல்வரையும் அதிமுகவினரையும் நோக்கி மிகக் கடுமையானவார்த்தைகளை விட்டார். உரத்த குரலில் அவர் சொன்ன வார்த்தைகளால் அதிமுகவினர் கோபமடைந்து கூச்சல் போட,

கோபத்துடன் எழுந்த முதல்வர் ஜெயலலிதா, அவையில் மிக ஆபாசமான வார்த்தைகளை பரிதி இளம்வழுதிபயன்படுத்தியுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உடனே சபாநாயகர் காளிமுத்து, பரிதியை அவையை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள்பரிதியை வெளியேற்றினர்.

இதைத் தொடர்ந்து திமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அமைச்சர் வளர்மதி தொடர்ந்து பேச, அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X