For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையை புறக்கணித்தது திமுக: எதிர்க் கட்சிகள் கூண்டோடு வெளியேற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியை சாதியைக் குறிப்பிட்டு மறைமுகமாக அமைச்சர் பேசியதாக காங்கிரஸ் தலைவர் எஸ்ஆர்பாலசுப்பிரமணியம் சட்டசபையில் பிரச்சனை கிளப்பினார். இதனால் எழுந்த மோதலையடுத்து எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள்கூண்டோடு அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த சாதி விவகாரம், கருணாநிதி மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் காரணமாக சட்டமன்றக் கூட்டத்தை திமுக இன்றுபுறக்கணித்தது. தொடர்ந்தும் அவைப் புறக்கணிப்பில் ஈடுபட அக் கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில் இன்று அவை கூடியதும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பேசுகையில்,

மானியக் கோரிக்கைகள் அறிவிக்கப்பட்ட பிறகும் முதலமைச்சர் பல அறிவிப்புகளை வெளியிடுகிறார். கூடுதல் செலவு பிடிக்கும்இந்த அறிவிப்புக்கள் எல்லாம் அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றவையா? இவ்வாறு அறிவிக்கப்படுவது சட்டத்துக்குஉட்பட்டது தானா? மேலும் எதிர்க் கட்சி உறுப்பினர்களை அமைச்சர்கள் இழித்துப் பேசுவதும், சாதியைக் குறிப்பிட்டும்பேசுகிறார்கள்..

(திமுக தலைவர் கருணாநிதி சார்ந்த இசை வேளாளர் சாதியைக் குறிப்பிடும் வகையில் ஊதி.. ஊதி என்ற வார்த்தையையும்வித்வான் என்ற வார்த்தையையும் அமைச்சர் வளர்மதி பயன்படுத்தினார். இதை எஸ்.ஆர்.பி. சுட்டிக் காட்டி பேச முயன்றார்)

அப்போது இடைமறித்த சபாநாயகர் காளிமுத்து: சாதியை குறிப்பிட்டு இங்கு யாரும் ஏதும் பேசவில்லை.

நிதியமைச்சர் பொன்னையன்: எஸ்.ஆர்.பி. பேசுவது உண்மைக்குப் புறம்பானது. சாதிக் குழப்பத்தை உருவாக்கும் வகையில்அவர் பேசுகிறார்.

முதல்வர் ஜெயலலிதா: எஸ்.ஆர்.பி. பேசும்போது ஊரகத்துறை அமைச்சர் கடந்த வியாழக்கிழமை பேசியதை குறிப்பிட்டார்.அமைச்சர் பேசும்போது யாரையும் சாதியைக் குறிப்பிட்டு பேசவில்லை. எனவே அவரைக் கட்டுப்படுத்த வேண்டியஅவசியமில்லை.

எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்: அமைச்சர் அன்று பேசும்போது ஊதி.. ஊதி பெரிதாக்க முயல்..

ஜெயலலிதா (இடைமறித்து): எஸ்.ஆர்.பி. தகராறு செய்வதற்காகவே வந்திருப்பதாகத் தெரிகிறது. இவர்களது கூட்டணிக் கட்சித்தலைவர் (கருணாநிதி) சபைக்கே வருவதில்லை. அவர் வராததால் மற்ற கூட்டணிக் கட்சியினரும் சபைக்கு வரக் கூடாது என்றுகருதுகிறார். இதற்காக கடந்த சில தினங்களாக பல விவாதங்களும் சந்திப்புகளும் நடந்துள்ளன.

அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிக்கலாம் என்றுமுடிவுக்கு வந்துள்ளார்கள். இதனால் தான் எஸ்ஆர்பி அப்படி பேசுகிறார்.

சபாநாயகர் காளிமுத்து: முந்தா நாள் பெய்த மழைக்கு இன்று ஏன் குடை பிடிக்கிறீர்கள் எஸ்.ஆர்.பி?

பொன்னையன்: கருணாநிதியின் ஊது குழலாக எஸ்.ஆர்.பி. இருக்கக் கூடாது.

எஸ்.ஆர்.பி.: அமைச்சர் வளர்மதி பேசும்போது 5 சொட்டு கண்ணீர் வடித்துவிட்டு அரைப்படி ரத்தம் குடிக்கத் துடிக்கிறார்கள்..அந்த வித்வான்கள்...

காளிமுத்து (இடைமறித்து): உட்காருஙகள்

எஸ்.ஆர்.பி.: சட்டசபையில் (அமைச்சர்) இவ்வாறு பேசுவதால் சிலர் (கருணாநிதி) உணர்வுகளை புண்படுத்துகிறார்கள்.

ஜெயலலிதா: மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது மாதிரி எஸ்.ஆர்.பி. பேசிக்கொண்டிருக்கிறார்.

எஸ்.ஆர்.பி.: அந்த வித்வான்கள் என்று கூறி...

ஜெயலலிதா: நாட்டில் பல துறைகளில் பயிற்சி பெற்ற பல வித்வான்கள் இருக்கிறார்கள். வித்வான் என்பது ஒருவரை மட்டும்குறிப்பிடக்கூடியது அல்ல.

காளிமுத்து: இனி இந்த கருத்து பற்றி பேச அனுமதி இல்லை. எல்லோரும் உட்காருங்கள்.

அப்போது காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் இது குறித்து பேச வாய்ப்பு கேட்க, அதை சபாநாயகர் மறுக்கஅவையில் கூச்சல் நிலவியது.

ஜெயலலிதா: நான் முன்பே சொன்னது போல் என் சந்தேகம் உறுதியாகிவிட்டது. திமுக எம்எல்ஏக்கள் இங்கு வரவே இல்லை.வேறு கட்சியினரை ஏவிவிட்டு சபையில் பிரச்சனையை ஏற்படுத்தி அமைதியை குலைக்க முயல்கிறார்கள். இதை சபாநாயகர்அனுமதிக்கக் கூடாது.

(தொடர்ந்து எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்க)

காளிமுத்து: அவை நடவடிக்கைகளை குந்தகப்படுத்தாதீர்கள். இப்போது முதல்வர் ஒரு அறிக்கையை வாசிப்பார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை வாசிக்கத் தொடங்க, எதிர்க் கட்சியினரின் கூச்சல் அதிகமானது.

காளிமுத்து: இதுவரை நீங்கள் பொறுப்புடன் இருந்தீர்கள். அந்த வரலாற்றில் கறுப்பு புள்ளி வைக்கும் வகையில் திமுக பாணியைகடைபிடிக்க வேண்டாம்.

ஆனாலும் எதிர்க் கட்சியினர் தொடர்ந்து பேச அனுமதி கோரி குரல் கொடுத்தனர்.

காளிமுத்து: அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அனைவரையும் வெளியேற்ற அவைக் காவலர்களுக்குஉத்தரவிடுகிறேன்.

இதையடுத்து காவலர்கள் உள்ளே புகுந்து அனைத்து எதிர்க் கட்சி எம்எல்ஏக்களையும் கூண்டோடு வெளியேற்றி முடிக்க,முதல்வர் தொடர்ந்து அறிக்கை வாசிக்க, அதிமுகவினர் மேஜையை தட்ட ஆரம்பித்தனர்.

சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய திமுக மூத்த தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான பேரசிரியர் அன்பழகன்,

கருணாநிதி குறித்து அமைச்சர் வளர்மதி பேசிய பேச்சால் தான் அவையை புறக்கணித்தோம். இன்று பிற கட்சித்தலைவர்களுடனும் இது குறித்துப் பேசவுள்ளோம் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவசுப்பிரமணியம் பேசுகையில், அவையைப் புறக்கணிக்க பிற கட்சிகள் முடிவுசெய்துள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஜெயலலிதா சட்டசபையில் கூறியது தவறானசெய்தி என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X