For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவில் இடிப்பு: ஜெயேந்திரர், ஜெயாவின் ஜோதிடர் மீது வழக்கு- உயர்நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் சிவன் சன்னதி இடிக்கப்பட்டது தொடர்பாக ஜெயேந்திரர், ஜெயலலிதாவின் ஜோதிடர்உண்ணிகிருஷ்ண பணிக்கர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றெழுத்து கொண்ட, தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனத்திற்கு பூர்வீக ஊர் இந்த திருக்குறுங்குடி. அந்த நிறுவனம் மேலும் செழிக்க, ஜெயலலிதாவின்ஜோதிடரான உண்ணிகிருஷ்ண பணிக்கரிடம் ஆலோசனை கேட்டுள்ளது.

இதையடுத்து பிரஷ்னம் நடத்திய (ஜோதிட விவாதம்) பணிக்கர், அழகிய நம்பிராயர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியை இடித்தால் தான் உங்கள் குடும்பத்துக்கும்,நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் நல்லது என அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அப்போது ஆளும் தரப்புக்கு மிக நெருக்கமாக இருந்த ஜெயேந்திரரின்உதவியோடு சிவன் சன்னதியை இடிக்கப்பட்டது.

பெருமாள் கோவிலில் சிவன் சன்னதியோடு சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய இந்தக் கோவிலில் நடந்த இந்த சன்னதி இடிப்பு அப் பகுதிமக்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதைத் தான் அர்ச்சகர் மாதவன் எதிர்த்தார். வைணவத் தலங்களில் சைவ மடாதிபதியான ஜெயேந்திரர் தலையிடுவது ஏன்என்று கேள்வி எழுப்பியதால் தான் அவரை ஆள் வைத்துத் தாக்கினார் ஜெயேந்திரர்.

இந் நிலையில் ஜெயேந்திரர் மீது பல வழக்குகள் போட்ட அரசு, இந்த சன்னதி இடிப்பு விவகாரத்தில் மட்டும் அடக்கி வாசித்தது. மாதவன் தாக்கப்பட்ட விஷயத்தைமட்டும் வழக்காக்கிய தமிழக அரசு, கோவில் இடிப்பில் ஜெயேந்திரர் மீது எந்த கேள்வியும் எழுப்பவில்லை. காரணம், இதில் போயஸ் கார்டனுக்கு மிக வேண்டியஉண்ணிகிருஷ்ண பணிக்கரும் சேர்ந்து மாட்டுவார் என்பது தான் என்கிறார்கள்.

இந் நிலையில் ஸ்ரீரங்கத்தில் உள்ள திவ்ய தேச பாரம்பரிய பாதுகாப்புப் பேரவையின் செயலர் கிருஷ்ணமாச்சாரி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில்

1000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சிவன் சன்னதி இருந்தது. திருக்குறுங்குடியில்

கோயிலில் 4வது பிரகாரத்தில் சிவலிங்கத்துக்காக தனியாக ஒரு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இது வைஷ்ணவ கோயில் ஆகம விதிகளுக்கு முரணானது. கோயிலில்இருந்த சிவன் சன்னதியை அகற்றிய ஜீயரின் செயல்கள் சட்ட விரோதமானது.

கோவில்களை கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத் துறைக்கு உள்ளது. சிவன் சன்னதி இடிக்கப்பட்ட பிறகு ஏராளமான மனுக்கள் அறநிலையத் துறைக்குஅனுப்பப்பட்டன. சிவன் சன்னதி அகற்றப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு ஜீயர் மடத்துக்கு நோட்டீஸ் மட்டும் அறநிலையத் துறை அனுப்பியது.

சிவன் சன்னதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருக்குறுங்குடி போலீஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி புகார் கொடுத்தேன். எனது புகார் மீதுநடவடிக்கை எடுக்கவில்லை. கேரளாவைச் சேர்ந்த உண்ணிகிருஷ்ண பணிக்கர் என்கிற ஜோதிடர் கூறியதன் பேரில் தான் சிவன் சன்னதி இடிப்புக்கான திட்டம்துவங்கியது.

சிவன் சன்னதியை இடித்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். சிவன் சன்னதி இடிப்பு குறித்து வழக்குப் பதிவு செய்துவிசாரிக்குமாறு உள்துறைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்க உத்தரவு:

இந்த மனுவை நீதிபதி பி.டி.தினகரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.பிரகாஷ் ஆஜராகி வாதாடினார். அரசு சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜி.சுகுமார்ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.தினகரன்,

ஜெயேந்திரர் உட்பட 6 பேர் மீது கொடுத்த புகாரை போலீஸார் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்ககை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகையில்,கோவில் சன்னதியை இடிப்பது இந்திய குற்றவியல் சட்டப்படி தவறு என்று வாதிட முடியாது. இருப்பினும், கோவில் சன்னதியை இடித்தள்ளதன் மூலம் இந்து மக்களின்மத உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கோணத்தில் இந்தப் பிரச்சினை குறித்து விசாரிக்க உள்துறைச் செயலாளர் ஏற்கனவே உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால்அவர் அவ்வாறு உத்தரவிடவில்லை.

அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் இந்த செயல் நடந்துள்ளது என்றும் அரசு சிறப்பு பிளீடர் ஒப்புக் கொண்டுள்ளார்.

வழிபாட்டுத் தலத்தில் மாற்றம் கொண்டு வருவதால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டால் வழிபாட்டுத் தலத்தை பாதுகாக்கவும், பொதுஅமைதி ஏற்படவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்படி விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உள்துறை செயலர் உத்தரவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு உள்துறை செயலர் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. இந்து அறநிலையத் துறை சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கோவில் சன்னதி இடிக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக ஜெயேந்திரர், ஸ்ரீனிவாச அறக்கட்டளை பிரதிநிதிவேணு ஸ்ரீனிவாசன் (டிவிஎஸ் அதிபர்களில் ஒருவர்), ஜீயர் மட பிரதிநிதி ராமானுஜ ஜீயர், ஸ்ரீவானமாமலை மட பிரதிநிதி ஸ்ரீமத் கல்யாண் வானமாமலை ராமானுஜஜீயர், உண்ணிகிருஷ்ண பணிக்கர் (ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில்தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X