வங்கிக்கணக்கு முடக்கம்: ரத்து செய்யக்கோரி வீரப்பனின் மனைவி மனு
சென்னை:
முடக்கப்பட்ட தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
எனது மகள்கள் விஜயலட்சுமி, வித்யா ராணி மற்றும் எனது பெயரில் சேலம் ஐந்து ரோடு ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் கிளையில் தலா ரூ.50,000 வீதம் 6 கணக்குகளில்மொத்தம் ரூ.3லட்சம் டெபாஸிட் செய்திருந்தேன்.
ரெக்கரிங் டெபாஸிட் திட்டத்தில் 120 மாதங்களுக்கு டெபாஸிட் செய்த பணத்தை சிறப்பு அதிரடிப் படையினர் முடக்கி வைத்து விட்டனர். இவ்வாறு முடக்கி வைக்கஅவர்களுக்கு உரிமையில்லை.
எனது மகள்கள் கல்வி செலவிற்காக ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது. இந்தப் பணத்தை எடுக்க அனுமதிக்காவிட்டால் அவர்களது கல்வி பாழாகி விடும். அவர்களதுவாழக்கையே பாதிக்கப்பட்டு விடும். எனக்கு வேறு எந்த வசதியும் இல்லை.
எனவே எனது மகள்களின் கல்வி செலவிற்காக வங்கியிலிருந்து பணத்தை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீரப்பனின் மகள்களை பல பள்ளிகள் சேர்க்க மறுத்த நிலையில், சென்னை புறநகரிலுள்ள ஒரு பள்ளி இருவரையும் சமீபத்தில் சேர்க்க முன் வந்தது குறிப்பிடத்தக்கது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |