• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சேது சமுத்திர விழாவில் பங்கேற்க மாட்டேன்: ஜெ

By Staff
|

சென்னை:

அரசியல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு நடத்தப்படும் சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் தன்னால்கலந்து கொள்ள முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அரசு செலவில் நடத்தப்படும்விழாக்கள் எதுவாக இருந்தாலும் அதில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பும் கருணாநிதியின்கட்டளையின் பேரில்

ஜூலை 2ம் தேதி நடத்தப்பட உள்ள சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா பெரிய அளவிலான அரசியல்கண்காட்சியாக அரங்கேற இருப்பதாக தெரிய வருகிறது. இத்திட்டம் செயல்படவிருக்கின்ற கடற்கரைப் பகுதியைவிட்டுவிட்டு மதுரையில் விழாவை நடத்துவதற்காக தேவையற்ற அவசரகதியில் ஏற்பாடுகள் நடைபெறுவதுதிகைப்பை ஏற்படுத்துகிறது.

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் இத்திட்டம் தொடர்பாக கூறப்பட்டு வருகின்ற சுற்றுச்சூழல் பாதிப்புகுறித்த பிரச்சினைகள் பற்றி தொடக்கத்தில் இருந்தே கவலைப்படாமல் அலட்சியப்படுத்தி வருகிறார்.

எம்ஜிஆரின் வேண்டுகோளின் பேரில் தான் சேது சமுத்திரத் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக1981ம் ஆண்டில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.

நான் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது இந்தப் பிரச்சினையை எழுப்பி, பொருளாதாரரீதியில் மட்டுமே இத்திட்டத்தை பரிசீலிக்காமல் தேசிய பாதுகாப்பு குறித்த கண்ணோட்டத்திலும் பரிசீலிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

நான் தான் காரணம்:

சேது சமுத்திரத் திட்டம் நனவாவதற்கு நான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறேன். அதே நேரத்தில் இத்திட்டம்செயல்படுத்தப்பட உள்ள பகுதி பல லட்சக்கணக்கான தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்ற மீன் பிடிமண்டலமாகவும் விளங்குகிறது.

இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக தக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுமீனவர்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றுநான் கூறி வந்துள்ளேன்.

ஆனால் இதற்கு மாறாக அமைச்சர் டிஆர். பாலு ஆடம்பர விழா நடத்த வேண்டும் என்ற ஆவலால் சுற்றுச் சூழல்பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேசி அப்பிரச்சினைகளைஅலட்சியப்படுத்தி வருகிறார்.

சுற்றுச்சூழல் அனுமதி குறித்த நடைமுறைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த கவலையைதருகிறது. மக்களின் நியாயமான கவலைகளுக்கு ஏன் உரிய மரியாதை அளிக்கப்பவில்லை. அவர்கள் கேட்கும்கேள்விகளுக்கு பதில் சொல்வது யார்?

டி.ஆர். பாலுவும் அவரது கூட்டாளிகளும் டெல்லிக்கு பறந்து விடுவார்கள். தமிழக அரசு தானே அவர்களுக்குபதில் சொல்லியாக வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஆனால்இத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த நியாயமான கவலைகளை சற்றும் இரக்கமின்றிபுறந்தள்ளிய டி.ஆர். பாலுவின் போக்கு உண்மையிலேயே பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக மீனவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் அவர் விளையாடுகிறார்.இத்திட்டத்தை அவசரகதியில் தொடங்க முற்பட்டிருக்கும் அவரை வருங்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள்.

மாபெரும் ஆடம்பர விழாவை நடத்த வேண்டும் என்பதையே குறியாகக் கொண்டு சுற்றுச்சூழல் ஒப்புதல்வழங்கும் நடைமுறையை சீர்குலைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில் ஜூலை 2ம் தேதிமதுரையில் நடைபெற உள்ள விழாவில் நான் பங்கேற்பது ஏற்புடையதாக இருக்காது.

இதனால் என்னால் அந்த விழாவில் கலந்து கொள்ள மனமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்னும் அழைப்பிதழ்கொடுக்கப்படவில்லை. அதற்குள் அவராகவே முந்தி தன்னால் விழாவுக்கு வரமுடியாது என்று கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X