சிவகாசி, பெரியகுளம் எம்பி தொகுதிகளின் பெயர்கள் மாற்றம்
சென்னை:
தமிழக சட்டசபைத் தொகுதிகளின் எல்லைகள், பெயர்கள் மாறவிருப்பதைப் போல பல எம்.பி. தொகுதிகளின் பெயர்களும்,எல்லைகளும் மாற்றியமைக்கப்படவுள்ளன.
ஆணையத் தலைவர் குல்தீப் சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, குழுவின் துணை உறுப்பினர்களான விஜயபாஸ்கர் (அதிமுக),பொன்முடி, முகவனம், கிருஷ்ணசாமி (திமுக), கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்), டாக்டர் கிருஷ்ணன் (மதிமுக), தனராஜ் (பாமக)உள்ளிட்டோர் கலந்து காண்டனர்.
இக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்து வைத்தனர். அவற்றை நீதிபதி குல்தீப்சிங் கவனமாக கேட்டுக் கொண்டார். உறுப்பினர்கள் கூறிய குறைபாடுகளை சரி செய்யவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த கூட்டத்தின் இறுதியில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் அதிகம் உள்ளதொகுதிகளை தனித் தொகுதியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிதம்பரம், நாகப்பட்டனம், திருவள்ளூர், நீலகிரி ஆகியமாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அதிக அளவில் உள்ளனர்.
ஆனால், இந்த மாவட்டங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இருப்பதால் இவற்றை தனித் தொகுதிகளாக அறிவிப்பதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி தனியாக விவாதிக்கப்படவுள்ளது.
இதேபோல சில தொகுதிகளின் பெயர்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக திருவள்ளூர் என்ற தொகுதிஉருவாகிறது. இத்தொகுதியின் கீழ் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர், மாதவரம் ஆகியசட்டசபைத் தொகுதிகள் வரும்.
இதேபோல திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஆகிய புதிய தொகுதிகளும் உருவாக்கப்படுகின்றன.
மயிலாடுதுறை தொகுதியை சிதம்பரத்துடன் இணைத்து அதை தனி தொகுதியாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெரியகுளம் தொகுதியை தேனி தொகுதியாகவும், பழனி தொகுதியை திண்டுக்கல் என்றும், சிவகாசி தொகுதியை விருதுநகர்என்றும், செங்கல்பட்டு தொகுதி காஞ்சிபுரம் என்றும் பெயர் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரியகுளம் தொகுதியின் பெயரை மாற்றுவதற்கு மட்டும் அதிமுக அதிக ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
தொகுதிகளின் பெயர்கள் மாறினாலும் தமிழகத்தில் உள்ள மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தமாற்றமும் இருக்காது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |