For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் வதம்: விஜயக்குமாருக்கு ஜனாதிபதி விருது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்திய தமிழக சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயக்குமார் உள்ளிட்ட 7 தமிழகஅதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் விருது வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் விருது பெற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறையினர்தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரும் இதில் அடக்கம். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீரப்பனைவீழ்த்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் டிஜிபி விஜயக்குமார், டிஐஜி செந்தாமரைக்கண்ணன், டி.எஸ்.பி. வெள்ளத்துரை ஆகியோர் அதிரடிப்படையில்இருந்தவர்கள். இவர்களில் வெள்ளத்துரை தான் வீரப்பனை நோக்கி சரமாரியாக சுட்டு அவனது கதையை முடித்து வைத்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர எஸ்.எம்.உசேன், ராமநாதன், சரவணன், குமாரவேலு ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் விருதுகிடைத்துள்ளது. இதேபோல தமிழக அரசின் முதல்வர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி சீரழிவின் போது மிகச் சிறப்பாகபணியாற்றிய நாகப்பட்டனம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கே.எப். அப்துல் ரஹூப்பிற்கு முதல்வர் விருதுகிடைத்துள்ளது.

சுனாமி அலைகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதிலும், பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவஉதவிகள் கிடைப்பதற்கும், மீட்புப் பணியிலும் காவல்துறையினரை முழு வீச்சில் ஈடுபடுத்தி திறமையாக செயல்பட்டதற்காகஇந்த விருது ரஹூப்பிற்கு வழங்கப்படுகிறது.

இதேபோல சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆர். நல்லசிவம் முதல்வர் விருது பெற்றுள்ளார். கண்டதேவிகோவில் தேரோட்ட விழாவின் போது, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல், சம்பந்தப்பட்ட சதாயத்தினருடன் உரியமுறையில் பேசி, எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் தேரோட்டத்தை நடத்த உதவியதற்காக நல்லசிவத்திற்கு முதல்வர் விருதுவழங்கப்படுகிறது.

இவர்கள் தவிர மேலும் 10 காவல்துறையினருக்கும் முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 8 கிராம் தங்கம், 2 கிராம் செப்புடாலருடன் கூடியது முதல்வர் விருதுக்குரிய பதக்கம். இன்று சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவின் போதுமுதல்வர் ஜெயலலிதா இவர்களுக்கு விருது, பதக்கம், சான்றிதழை வழங்கி கெளரவிப்பார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X