For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களை நம்பி இறங்கியுள்ளேன்: விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மாநாட்டு மேடையில் விஜயகாந்த், மன்ற நிர்வாகிகள்

தமிழகத்தின் பெண்களை நம்பி அரசியல் களத்தில் இறங்கியுள்ளேன். அவர்களது ஆதரவு எனக்கு நிச்சயம் கிடைக்கும் என்று விஜயகாந்த்கூறியுள்ளார்.

மதுரை திருநகர் அருகே தோப்பூரில், நடிகர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் முதலாவது அரசியல் மாநில மாநாடு இன்று காலைதொடங்கியது. மாநாடு தொடங்கிய சிறிது நேரத்தில் விஜயகாந்த் கட்சியின் பெயரை அறிவித்துப் பேசினார்.

விஜயகாந்த் பேசுகையில், எனது இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உயிரினும் மேலான அன்புத் தமிழ் நெஞ்சங்களே, உங்கள்அனைவருக்கும் இந்த மாநாடு ஒரு சவால். இதை நீங்கள் எப்படி முறியடிப்பீர்கள், எப்படி அமைதி காப்பீர்கள் என்பதில்தான் எனது முழுகவனமும் இருக்கிறது.

நமக்குப் பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் இங்கே இருப்பார்கள். அவர்கள் தப்புத் தப்பாக வெளியில் போய் சொல்லி விட நாம்காரணம் கொடுத்து விடக் கூடாது. இன்னும் சிறிது நேரம்தான் நீங்கள் ரசிகர்கள். தமிழகம் முழுவதும், ஏன் இந்தியாவே நம்மைத் திரும்பிப்பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள். அனைவரும் நம்மை நோக்கி பார்வையைச் செலுத்தவைத்திருக்கிறீர்கள்.

உளளே லட்சக்கணக்கில் அமர்ந்திருக்கிறீர்கள். வெளியிலும் ஏராளமான பேர் கூடியிருக்கிறார்கள். அவர்களும் உள்ளே வர வேண்டும்.மாலையில் அனைவரும் உள்ளே அமரும் வகையில்க ாவல்துறை உதவியுடன் ஏற்பாடு செய்வேன்.

கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நானும், எனது மனைவியும் அடிக்கடி விவாதித்து வந்தோம். எங்களது நண்பர்பாலசுப்ரமணியமும் 2 மாதங்களாக இதே யோசனையில் இருந்து வந்தார். ஆனால் சிலர் அதற்குள் விஜயகாந்த் கட்சிப் பெயர் உறுதியாகிவிட்டதாக எழுதத் தொடங்கினர். உண்மையில் நேற்று இரவுதான் கட்சிப் பெயர் முடிவானது.

மாநாட்டுக்கு வந்திருந்த ரசிகர் கூட்டம்

மேலே உள்ள தெய்வம், உங்களது ஆசி ஆகியவற்றால்தான் இது முடிந்தது. எனக்கும், மாநாடு வரப் போகிறதே, இன்னும் பெயர்முடிவாகவில்லையே என்று குழம்பித்தான் இருந்தேன். ஆனால் எல்லாம் வல்ல சிவபெருமான், மீனாட்சி அம்மன், எனது குல தெய்வம்,திருப்பரங்குன்றம் முருகன் ஆகியோரது ஆசியால் நல்ல பெயராக அமைந்து விட்டது.

அந்தப் பெயரை உங்களுக்கும் அறிவிக்கிறேன்.தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (மூன்று முறை இப்பெயரை கூறினார்). எத்தனையோபெயர்களை யோசித்தும் இப்பெயர்தான் சிறப்பாக இருந்தது. கட்சிக்கு ஏன் இந்தப் பெயர் சூட்டினேன்? நமது நாட்டில் திராவிடமொழியில் பேசுகிற மாநிலங்கள் அதிகம். தேசியத்தில் திராவிடம் என்பதால் தேசியத்தைக் கட்சியில் சேர்த்தேன். திராவிடமும்அப்படித்தான்.

ரசிகர்கள் மத்தியில் பின் தங்கிய எண்ணங்கள் வந்து விடக் கூடாது என்பதற்காக முற்போக்கு என்ற வார்த்தையை சேர்த்தேன். இந்தஇயக்கத்தை அவர்கள் முன்னெடுத்த செல்ல வேண்டும் என்பத்காகவும் அந்த வார்த்தையை சேர்த்தேன். இவை எல்லாம் சேர்ந்துதான்தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற பெயரை உருவாக்கினேன்.

நான் யாரையும் நம்பவில்லை. தமிழக மக்களை மட்டுமே நம்புகிறேன். குறிப்பாக பெண்களை நம்புகிறேன். அவர்களில் முக்கால்வாசிப்பேர் எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புகிறேன். தமிழகத்தில் 50 சதவீத ஓட்டுக்கள் பெண்களிடம்தான் உள்ளது.

எனது ரசிகர்கள் நாள் முழுவதும் உன்னோடு இருப்பார்களா என்று கேட்டார்கள் சிலர். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன். அவர்கள்ராணுவம் பான்றவர்கள். நான் சொல்வதை தட்டாமல் கேட்பவர்கள். என்னோடு நிச்சயம் இறுதி வரை இருப்பார்கள் என்றார் விஜயகாந்த்.

இன்று மாலை தனது கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து விஜயகாந்த் பேசவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X