திருப்பதியில் பிரமோற்சவம் நாளை தொடக்கம்
திருப்பதி:
திருப்பதி வெங்கடாஜலபதி ஆலய நவராத்திரி பிரமோற்சவம் நாளை துவங்குகிறது.
இந்த விழாவின்போது தினமும் காலையிலும் இரவிலும் 100 ஆண்டு பழைய வெங்கடேஸ்வரரின் சிலை பல்வேறு வாகனங்களில்ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
விழா தொடங்கிய 5ம் நாள் கருட சேவை நடக்கிறது. பிரமோற்சவ விழாவின் நிறைவு தினமான 11ம் தேதி தேரோட்டம் நடக்கும்.
பிரமோற்சவத்தையொட்டி நாளை ஆந்திர முதல்வரின் சார்பில் பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்கப்படும்.வழக்கமாக இந்த வஸ்திரம் கருட சேவை தினத்தன்று தான் முதல்வரால் நேரடியாக கோவிலில் வழங்கப்படும்.
இதனால் வருடந்தோறும் அன்றைய தினம் மிக பலத்த பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கும். இதனால் பக்தர்களுக்கு ஏற்படும்சிரமத்தைக் குறைக்கும் வகையில் நாளையே கோவிலுக்கு வந்து வஸ்திரத்தை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வஸ்திரம் கருட சேவை தினத்தன்று இறைவனுக்கு போர்த்தப்படும்.
ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த பிரமோற்சவத்தையொட்டி வரும் 11ம் தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில்குவிய உள்ளனர். இதையடுத்து திருப்பதி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |