For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிமன்ற சம்மனை வாங்க மறுப்பு: குஷ்பு தரப்பின் திமிர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருச்சி நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வாங்க குஷ்பு மறுத்துள்ளார். இதையடுத்து தபாலில் அந்த சம்மன் அனுப்பப்படுகிறது.இதையும் வாங்காவிட்டால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Kushboo

குஷ்புவுக்கு எதிராக 25 நீதிமன்றங்களில் 30க்கும் அதிகமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. திருச்சி 2வது ஜுடிசியல்நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சித்ரா என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை ஏற்ற நீதிபதி உமா மகேஸ்வரி வரும் 14ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதற்கானசம்மனுடன் திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பாத்திமா மற்றும் ஏட்டையா அறிவழகன்ஆகியோர் சென்னை வந்தனர்.

குஷ்புவின் வீட்டுக்குச் சென் அவர்கள், சம்மனை அவரிடம் தர முயன்றனர். ஆனால், அங்கிருந்த குஷ்புவின் மேனேஜர்அவர்களை அனுமதிக்கவில்லை. குஷ்பு சிங்கப்பூர் போய்விட்டார் என்றார்.

இதையடுத்து போலீஸ் வழக்கப்படி அந்த சம்மனை குஷ்புவின் வீட்டுக் கதவில் ஒட்ட போலீசார் முயன்றனர். ஆனால், அதற்கும்மேனேஜர் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.

கடைசி வரை சம்மனை ஒட்ட விடாததால், இருவரும் திருச்சி திரும்பிவிட்டனர். இந்த சம்மன் தபால் மூலம் அனுப்பப்படும் என்றுதெரிகிறது. இதையும் குஷ்பு தரப்பு வாங்க மறுத்தால், அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என்றுதெரிகிறது.

அதே போல திருவாரூரில் பாமக சார்பில் லலிதா என்பவர் போட்ட வழக்கில் வரும் நவம்பர் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என குஷ்புவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குஷ்புவின் புலம்பல் பேட்டி:

இதற்கிடையே குஷ்பு அளித்துள்ள பேட்டியில்,

நான் சொல்லாத கருத்தை பத்திரிக்கையில் போட்டுவிட்டார்கள். இதனால் தான் பிரச்சனை வந்துவிட்டது. தமிழ்ப் பெண்களின்கற்பு பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.

என்னை களங்கப்படுத்த முயற்சி நடந்தது. என் மனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் சொல்லாத ஒரு கருத்துக்காக தமிழகமக்கள் என்னைத் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான் மன்னிப்பு கேட்டேன். என்னை ஆதரித்து முகவரிதந்தவர்கள் தமிழர்கள். என்னை வாழ வைத்தவர்கள்.

நான் தமிழ் மண்ணை நம்பி வந்து இங்குள்ள கலாச்சாரத்தோடு கலந்துவிட்டேன். தமிழரை திருமணம் செய்து தமிழ் மருமகளாகவாழ்கிறேன். இந்த மண்ணில் தான் என் வாழ்க்கை முடிய வேண்டும்.

ஒரு பெண் என்றும் பாராமல் என் கொடும்பாவியை எரித்து, காலால் எட்டி உதைக்கிறார்கள்.

வீட்டை விட்டு எங்கேயும் போக முடியவில்லை. யாராவது வருவார்களோ திடீரென தாக்குவார்களோ என்று பயமாக உள்ளது.குழந்தைகளுடன் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன்.

தமிழ் மக்களிடம் நான் கை கூப்பி சொல்கிறேன். நீங்கள் என்னிடம் கோபப்பட்டதாக கூறப்பட்ட கருத்துக்கள் என்னால்சொல்லப்பட்டது அல்ல. என் குழந்தைகளை தமிழ் கலாச்சாரப்படி வளர்க்கிறேன். தமிழ்ப் பெண்களை கேவலமாகப்பேசியிருந்தால் அது என் குடும்பத்தையே நான் கேவலமாக பேசுவதற்கு சமம்.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

குஷ்புவுக்கு நஷ்டம் ரூ. 30 லட்சம்:

Kushboo

இதற்கிடையே தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து பேசிய குஷ்புவுக்கு இதுவரை ரூ. 50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

மும்பையில் இருந்து குடும்பத்துடன் ஒரு சொகுசு கப்பலில் வெளிநாடு செல்ல டிக்கெட் புக் செய்திருந்தார் குஷ்பு. ஆனால், அந்தப்பயணத்தை குஷ்பு ரத்து செய்ததால் பல லட்சம் நஷ்டமாம்.

அதே போல குஷ்புவை வைத்து படமெடுக்க இருந்த 3 தயாரிப்பாளர்கள் அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதால் அவர்கள்கொடுக்க இருந்த சம்பளமும் வரவில்லை. அந்த வகையில் ரூ, 20 லட்சம் வரை நஷ்டமாம்.

மேலும் குஷ்பு-ஜோதிகாவை வைத்து ஜூன்-6 படத்தை எடுத்து தயாராக வைத்துள்ள கேரள பெண் இயக்குனர் அதை ரிலீஸ்செய்ய முடியாத சிக்கலில் உள்ளார். இதனால் அந்தப் படத்தில் போட்ட முதலீடும் பணால் என்கிறார்கள்.

மொத்தத்தில் குஷ்புவுக்கு மட்டுமே இந்த விவகாரத்தில் ரூ. 30 லட்சம் வரை நஷ்டம் உண்டாகியுள்ளதாம்.

இதற்கிடையே விடாத மழை மாதிரி குஷ்பு மீது வழக்குகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X