ரவுடிகளை கைது செய்ய கோரி காவல் நிலையம் முற்றுகை
ஆத்தூர்:
சேலத்தில் ரவுடிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த வின்சென்ட், அழகேசன், அங்குராஜ், செந்தில், கங்காதுரை, மணி, பெரியசாமி, சின்னசாமி, சுப்பிரமணிஉள்பட 12 பேர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பெண்களை கேலி கிண்டல் செய்து வந்தனர்.
மேலும் சாலையில் சுற்றித்திரியும், ஆடு-கோழிகளை கொன்று சமைத்து சாப்பிட்டு வந்தனர். இதை தட்டிக்கேட்பவர்களைபெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்தனர். இந்த ரவுடிகளின் தொல்லையால் அந்த கிராமத்தில்வசிக்கும் பெண்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர்.
இந்த பகுதியை சேர்ந்த செல்வி (வயது 30) என்பவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த கும்பல் செல்வியைமானபங்கம் செய்தனர். இதனால் அவர் கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு முருகேசன், ரவிச்சந்திரன், விஜயகுமார்,பெத்துசாமி, வேலு ஆகியோர் ஓடி வந்தனர். அவர்கள் ரவுடிகளிடம் தட்டி கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் முருகேசன் உள்பட 5 பேரும்படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் சுமார் 200 பேர் திரண்டு ஆத்தூர் போலீஸ்நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் இல்லாததால் திடீரென்று அவர்கள் போலீஸ் நிலையத்தைமுற்றுகையிட்டு புங்கவாடி கிராமத்தில் அராஜகம் செய்து வரும் ரவுடிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோஷம் போட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பிறகு இன்ஸ்பெக்டர் சிங்குராஜ்விரைந்து வந்து ரவுடிகளை கைது செய்வதாக உறுதியளித்தபின் கலைந்து சென்றனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |