For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புழல் ஏரி திறப்பு: வெள்ளத்தில் சிக்கிய 50 கிராமம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புழல் ஏரி திறக்கப்பட்டதால் மணலி, திருவொற்றியூரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தொடர்ந்து 3வதுநாளாக தத்தளிக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி நிரம்பி வழிவந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு மதகுகள் திறக்கப்பட்டுஉபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம்,வடகரை, கொசப்பூர், ஆமுல்லைவாயல்,வைக்காடு உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது.

இரவு நேரத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. வாகனங்கள்செல்வதில் தடை ஏற்பட்டதால் படகுகள் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சடையன் குப்பம் கிராமத்தை சேர்ந்த தியாகு, சங்கர் ஆகிய இருவரும் வெள்ளத்தில் மூழ்கிய சாலையைக் கடக்கும் போதுதண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதில் சங்கரின் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. தியாகுவின்சடலத்தை படகுகள் மூலம் மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர்.

இதனை அடுத்து பொதுமக்கள் சாலையைக்கடப்பதை தவிர்க்கும் வகையில் போலீசார் தடுப்புகள் அமைத்து உள்ளனர். சென்னைஉரத் தொழிற்சாலை அருகே மார்பளவு தண்ணீர் செல்கிறது. எனவே மணலி, திருவொற்றியூரில் இருந்து பொன்னேரி செல்லும்வாகனப் போக்குவரத்து மூன்றாவது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது.

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் 2 நாளில் இப்பகுதிகளில்வெள்ளம் வடியும் என எதிர்பார்ப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X