• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

டாக்டர்களின் வங்கி லாக்கர்களில் சோதனை: ரெய்டில் சிக்கியது ரூ. 8 கோடி

By Staff
|

சென்னை:

சென்னை மற்றும் கும்பகோணத்தில் பிரபல மருத்துவமனைகள், டாக்டர்களின் வீடுகளில் நேற்று தொடங்கிய வருமான வரிசோதனைகள் விடிய விடிய நடந்தன. இன்றும் இச் சோதனைகள் தொடர்கின்றன.

இந்தச் சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரூ. 8 கோடி முதல் ரூ. 12 கோடி வரையில் மதிப்புள்ள நகை, பணம் ஆகியவையும்மேலும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர 13 வங்கி லாக்கர்கள் இன்று திறந்து சோதனையிடப்படவுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு மதுரையில், பிரபல டாக்டர்கள், மருத்துவமனைகள், ஸ்கேனிங், எக்ஸ்ரே மையங்கள் ஆகியவற்றில்அதிரடி வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில்வராத கோடிக்கணக்கான ரூபாய் பணம், நகைஉள்ளிட்டவை பறிமுதல்

செய்யப்பட்டன.

மேலும் ஸ்கேனிங் சென்டர்களுக்கும் டாக்டர்களுக்கும் இடையில் நிலவும் திருட்டுக் கூட்டணியும் வெளிச்சத்துக்கு வந்தது.

இந் நிலையில் சென்னை மற்றும் கும்பகோணத்திலும் அதே போன்ற ரெய்டுகளை வருமான வரித்துறை நடத்தி வருகிறது.

நேற்று தொடங்கிய இந்த ரெய்டில் வருமான வரித் துறையைச் சேர்ந்த 300 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். விடிய விடிய இந்தஅதிரடி சோதனைகள் நடந்தன.

இது குறித்து சென்னை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சந்தோஷ் தத்தா செய்தியாளர்களிடம் கூறியது:

டாக்டர் என்ற புனிதமான தொழிலைப் பயன்படுத்தி பலர் முறைகேடாக பணம் சம்பாதித்து அப்பாவி பொதுமக்களின் பணத்தைசுரண்டி வருவதாகவும், வருமான வரியை சரியாக கட்டாமல் ஏமாற்றுவதாகவும் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்தன.

தவறான வழியில் செல்லும் டாக்டர்களைத் திருத்த சோதனை நடத்த முடிவு செய்தோம். கடந்த வாரமே இதை செய்திருப்போம்.ஆனால் நான் வெளியூர் சென்று விட்டதால் அப்போது செய்ய முடியவில்லை.

செவ்வாய்க்கிழமை காலை 8.20 மணிக்கு சோதனை ஆரம்பித்தது. 300 அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.பல், இருதய, முட நீக்கியல், கண் மருத்துவர்களின் வீடுகள், மருத்துவமனைகளில் இந்த சோதனை முக்கியமாக நடைபெற்றது.

ஆபரேஷன் கிரஷ் என்று இதற்குப் பெயர் வைத்தோம். மொத்தம் 8 மருத்துவமனைகள், 14 டாக்டர்களின் வீடுகளில் இந்தசோதனை நடைபெற்றது. 40 பேரிடம் விசாரணை நடத்தினோம்.

சோதனையின்போது ஒரே டாக்டரின் வீட்டில் மட்டும் ரூ. 62 லட்சம் பணம் ரொக்கமாக சிக்கியது. இதேபோல, கும்பகோணத்தில்ஒரு டாக்டர் கல்யாண மண்டபம் கட்டி வருவதும், இன்னொரு டாக்டர் 3 நட்சத்திர ஹோட்டல் கட்டி வருவதும் தெரிய வந்தது.

திருச்சி, கோவை நகர்களிலும் இதுபோல சில டாக்டர்கள் செயல்பட்டு வருவது குறித்துத் தகவல் உள்ளது. அங்கு இதுவரைசோதனை நடத்தவில்லை. அங்கு முறைகேடாக செயல்பட்டு வரும் டாக்டர்கள், தாங்களாகவே முன்வந்து வரியைக் கட்டிவிடுவது நல்லது என்றார் தத்தா.

சினிமா நடிர்கள் ரூ. 30 கோடி ஏப்பம்:

சமீபத்தில் திரையுலக பிரபலங்களின் வீடுகளில் தொடர்ந்து 2 நாட்கள் அதிரடியாக சோதனை நடந்தது.

அது குறித்து சந்தோஷ் தத்தா கூறுகையில், கடந்த அக்டோபர் 26ம் தேதி நடிகர்கள் விஜய், விக்ரம், ஜெயம் ரவி, சிலம்பரசன்,விவேக், நடிகைகள் த்ரிஷா, ஸ்னேகா,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, இயக்குனர்கள் ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா,எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய டி.ராஜேந்தர்,

பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், மனோ, தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், பைனான்சியர்கள் பங்கஜ் மேத்தா, சுபாஷ் நாஹா, சஞ்சய்வாத்வானி ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அந்தச் சோதனைகளின்போது ரூ. 30 கோடி அளவுக்கு திரையுலகினர் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.சம்பந்தப்பட்டவர்களிடம் கட்டாமல் ஏமாற்றிய வரியைக் கட்டுமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார் தத்தா.

சென்னை மருத்துவமனைகள், டாக்டர்கள் வீடுகள், ஸ்கேனிங் சென்டர்களில் வருமான வரி ரெய்ட்

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X