For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாவுகளுக்கு அரசே பொறுப்பு: மார்க். கம்யூ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலரை கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங்தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஆர்.உமாநாத், மாநிலச் செயலாளர் என். வரதராஜன், மத்திய குழுஉறுப்பினர்கள் பி.ராமச்சந்திரன், என்.சங்கரய்யா, டி.கே.ரெங்கராஜன், ஏ.கே.பத்மநாபன், உ.வாசுகி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 42 பேருக்குமாநில செயற்குழு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

தமிழகத்தில் கன மழை வெள்ளப்பெருக்கால் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிர்சேதம், பொருட்சேதம்,விவசாயம் பாதிப்பு, ஆகியவற்றால் மக்கள் குடும்பத்தோடு நிர்கதியாகியுள்ளனர். சென்னையில் இன்னும் தண்ணீர் வடியாத நிலைநீடிக்கிறது.

இதற்கெல்லாம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு வன்மையாக கண்டிக்கிறது. வியாசர்பாடி நெரிசல் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அதிமுக அரசுபடிப்பினையை கற்றுக் கொள்ள தவறியதால் தான் தற்போது 42 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

நிவாரண முகாமில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யத் தவறிய அதிமுக அரசு இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பை ஏற்கவேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் என்ற பெயரில் ரூ. 1,000, 2,000 என தந்து தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் தமிழக அரசு,நீண்டகால துயர் துடைப்பு, மறுவாழ்வு ஆகிய நடவடிக்கைளில் இறங்க வேண்டும்.

மத்திய அரசு, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக தந்துள்ள ரூ.1,000 கோடியோடுநிறுத்திக் கொள்ளாமல் கூடுதல் நிதி தந்து உதவிட வேண்டும்.

தமிழக அரசு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் உதவித் தொகை வழங்கிட வேண்டும்.

தனியார் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைகள்தொடர்ந்திட வேண்டும். அதே சமயம் ஏழை எளிய மக்களின் தொழில் பாதிப்பின்றி மாற்று வாழ்விடங்களை அரசு ஏற்படுத்தி தரவேண்டும்.

இந்த நடவடிக்கைகளை கண்காணித்து முறைப்படுத்திட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் குழுவை மாநில, மாவட்டஅளவில் அமைத்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில்நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து பேசிய கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன்,

கே.கே.நகர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்தி மக்களை திசை திருப்பும்நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். இச் சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலரை கைது செய்து இருப்பது குறித்து தமிழகஅரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஜனநாயக மாதர் சங்க தலைவர்களில் ஒருவரான சூசைமேரி மீது கொலை தாக்குதல்நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசையும், காவல் துறையையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X