For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏப்-9 முதல் கருணாநிதி பிரசாரம் தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி வரும் 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை வடக்கு மற்றும்மேற்கு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யவுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி நான்கு நாட்களாகிவிட்டன. அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அனல் பறக்கும்பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

வைகோ தினசரி போடும் "குண்டுகளால் திமுக தரப்பு கலக்கமடைந்துள்ளது.விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் 5ம் தேதி முதல் பிரசாரத்தைத்தொடங்குகிறார்.

ஆனால், திமுக தரப்பில் இன்னும் தேர்தல் பிரசாரப் பணிகள் தொடங்கவில்லை. இந்நிலையில, திமுக தலைவர் கருணாநிதியின் பிரசார சுற்றுப் பயண விவரம்வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 9ம் தேதி கருணாநிதி சென்னை சேப்பாக்கம் தொகுதியிலிருந்து தனதுபிரசாரத்தை தொடங்குகிறார். 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களும் அவர் சேப்பாக்கம்தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

12ம் தேதி சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம்,அச்சரப்பாக்கம், திண்டிவனம், விக்கிரவாண்டி, விழுப்புரத்தில் பிரசாரம்மேற்கொள்கிறார்.

13ம தேதி மடப்பட்டு என்ற இடத்தில் தொடங்கி கடலூர் வரை பிரசாரம்மேற்கொள்கிறார்.

14ம் தேதி புவனகிரியில் தொடங்கி கும்பகோணம் வரை.

15ம் தேதி தஞ்சை முதல் புதுக்கோட்டை வரை.

17, 18, 19 ஆகிய நாட்களில் மீண்டும் சேப்பாக்கத்தில் பிரசாரம்.

20ம் தேதி பூந்தமல்லியில் தொடங்கி வேலூர் வரை.

21ம் தேதி பள்ளிகொண்டாவில் தொடங்கி கிருஷ்ணகிரி வரை.

22ம் தேதி காவேரிப்பட்டணத்தில் தொடங்கி சேலம் வரை.

23ம் தேதி மல்லூரில் தொடங்கி ஈரோடு வரை.

24ம் தேதி கோபிச்செட்டிப்பாளையத்தில் தொடங்கி கோவை வரை பிரசாரம்செய்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் தென் மாவட்ட சுற்றுப்பயண விவரம் பின்னர் வெளியிடப்படும் எனதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

ஏப்5ல் கூட்டணி பொதுக் கூட்டம்:

இதற்கிடையே வரும் 5ம் தேதி மாலை திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் பிரசாரக் கூட்டமும் நடைபெறுகிறது.

சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் இந்த திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்களின் கூட்டுப் பிரசார கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கருணாநிதி, டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி,வரதராஜன், தா.பாண்டியன், காதர் மொஹதீன், ஜவாஹிருல்லா, ஆர்.எம்.வீரப்பன்உள்ளிட்ட கூட்டணிக்கட்சித் தலைவர்கள் பேசவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின்போது கலர் டிவி வாக்குறுதி குறித்து விரிவாக விளக்குவதாககருணாநதி அறிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலர்டிவி திட்டம் குறித்து பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தை, சன் டிவியின் தனிப்பட்ட வளர்ச்சியோடு இணைத்து வைகோ செய்துவரும் பிரசாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், இத்திட்டம் குறித்து விளக்கவேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இக்கூட்டத்தில் கருணாநிதி என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் அனைத்துக் கூட்டணிக் கட்சித்தலைவர்களும் தனித்தனியே தங்களது பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X