For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேப்டன் மச்சான் குடியாத்தத்தில் போட்டி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகர் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ், குடியாத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

விஜயகாந்த் வெளியிட்டுள்ள தே.மு.தி.கவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் 4பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 31ம்தேதி விஜயகாந்த் வெளியிட்டார். அதில் 140 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்இடம் பெற்றிருந்தனர். விருதாச்சலத்தில் விஜய்காந்த் போட்டியிடுவார் என்றுஅறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் மேலும் 77 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த்வெளியிட்டுள்ளார்.

குடியாத்தம் தொகுதியில் விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இது தான் விஜய்காந்தின் மாமனார் ஊராகும்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் போட்டியிடும் ஆயிரம் விளக்குதொகுதியில் தளபதி எனபவர் தே.மு.தி.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் 4 பேர் பெண்கள். ஏற்கனவே வெளியான முதல் பட்டியலில் 18பெண்கள் இடம் பெற்றிருந்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 பேரையும் சேர்த்துமொத்தம் 22 பெண்கள் இதுவரை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 217தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் விஜயகாந்த்.மீதமுள்ள 17 தொகுதிகளுக்கு ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்என கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன் தெரிவித்துள்ளார்.

2வது பட்டியல்:

ஆயிரம் விளக்கு - தளபதி

எழும்பூர் (தனி) - பால்ராஜ்

ஆலந்தூர் - விஜயக்குமார்

தாம்பரம் - ஆர்.ஜெயந்தி

திருப்போரூர் (தனி)- கே.கண்ணப்பன்

செங்கல்பட்டு - மஞ்சுளா

மதுராந்தகம் - கஜேந்திரன்

அச்சரப்பாக்கம் (தனி) - கந்தகுருநாதன்

காஞ்சிபுரம் - ஏகாம்பரம்

ஸ்ரீபெரும்புதூர் (தனி) - பழனி

ராணிப்பேட்டை - பாரி

ஆற்காடு - வி.பி.வேலு

பேரணாம்பட்டு (தனி) - டாக்டர் கந்தப்பன்

குடியாத்தம் - எல்.கே.சுதீஷ்

வாணியம்பாடி - முகம்மது அன்வர்

திருப்பததூர் - செந்தில்குமார்

காட்பாடி - ராதாகிருஷ்ணன்

தண்டாரம்பட்டு - முகம்மது

திருவண்ணாமலை - ஸ்ரீகுமரன்

போளூர் - டாக்டர் புருஷோத்தமன்

திண்டிவனம் - கே.லட்சுமணன்

கண்டமங்கலம் (தனி) - ராஜு சந்திரசேகர்

விழுப்புரம் - துரைசாமி

திருநாவலூர் - உதயகுமார்

சின்னசேலம் - சுப்பராயலு

கடலூர் - ஜெயக்குமார்

அரூர் (தனி) - அர்ச்சுனன்

மொரப்பூர் - சரவணன்

சேலம் 2-ஞானசேகரன்

வீரபாண்டி - கோவிந்தராஜ்

பனைமரத்துப்பட்டி - சுரேஷ்பாபு

எடப்பாடி - ராஜேந்திரன்

கோவை மேற்கு - ஏ.எஸ்.அக்பர்

பழனி (தனி) - சுந்தரம்

சோழவந்தான் - பி.ராஜேந்திரன்

கரூர் - ஏ.ரவி

லால்குடி - எஸ்.ராமு

சீர்காழி (தனி) - பொன். பாலகிருஷ்ணன்

மயிலாடுதுறை - தவமணி

குத்தாலம் - சாரங்கபாணி

நாகப்பட்டனம் -மதியழகன்

நன்னிலம் (தனி) - மெளன குரு

திருவாரூர் (தனி) - மோகன்குமார்

மன்னார்குடி - முத்தையா

தஞ்சாவூர் - சிவநேசன்

பாபநாசம் - மருதையன்

கும்பகோணம் - தேவதாஸ்

திருமயம் - பழ. ராமநாதன்

கொளத்தூர் (தனி) - உதயக்குமார்

புதுக்கோட்டை - ஜவாஹீர்

ஆலங்குடி - செல்வின்ராஜ்

காரைக்குடி - துரை. பாஸ்கரன்

இளையாங்குடி - மணிமாறன்

சிவகங்கை - சி.ஆர்.பாலு

மானாமதுரை (தனி) - மாயாண்டி

திருவாடானை - திருவேங்கடம்

ராமநாதபுரம் - தர்மராஜ்

சாத்தூர் - எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம்

ராஜபாளையம் (தனி) - அய்யனார்

விளாத்திகுளம் - சி.பாலகிருஷ்ணன்

ஒட்டப்பிடாரம் (தனி) - மோகன்ராஜ்

கோவில்பட்டி - சீனிவாச ராகவன்

சாத்தான்குளம் -டைமண்ட் ராஜ்

திருச்செந்தூர் - ஏ.கணேசன்

ஸ்ரீவைகுண்டம் - சத்தியசீலன்

தூத்துக்குடி - சாமி என்ற ரவி

சங்கரன்கோவில் (தனி) - கே.முத்துக்குமார்

வாசுதேவநல்லூர் (தனி) - எஸ்.பிச்சை

கடையநல்லூர் - மா.கண்பதி ராமசுப்ரமணியம்

தென்காசி - கே.ஆர்.எஸ்.காமராஜ்

ஆலங்குளம் - கே.முத்துக்குமாரசாமி

அம்பாசமுத்திரம் - சையத் அலிபாத்

ராதாபுரம் - சிவனைந்த பெருமாள்,

நாகர்கோவில் - ஏ.வி.எம். லயன்ராஜா,

குளச்சல் - எஸ்.ஏ.வெலிங்டன்

திருவட்டார் - ஜெகநாதன்

விளவங்கோடு - எல்.சோனி

கொடியை எரிக்க முயற்சி:

இதற்கிடையே தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் முன்னிலையிலே அவரதுகட்சிக்கொடியை தொண்டர்கள் எரிக்க முயன்றனர். கோபமடைந்த விஜயகாந்த்ரசிகர்களை கண்டித்தார்.

செங்கல்பட்டில் கூடுவாஞ்சரிேயில் ஒன்றிய தலைவர் கரீம் தலைமையில்விஜயகாந்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய விஜயகாந்த்,நான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழித்து தொழிற்சாலைகளை அதிகபடுத்திவேலைவாய்ப்புக்கு வழி செய்வேன்.

இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவேன். இலவசமின்சாரம் என்று அரசியல் கட்சிகள் உங்களை ஏமாற்றி வருகின்றன என்றார்.

பின்னர் சிங்கம்பெருமாள் கோவில், மறைமலைநகர் பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்தஅவர் ஊரபாக்கம் வழியாக வண்டலூர் சென்றார்.

வண்டலூரில் அவரின் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் விஜயகாந்தை பேசசொல்லி வற்புறத்தினர். போலீசாரிடம் அனுமதி பெறாததால் வண்டலூரில் பேசமுடியாது என விஜயகாந்த் தெரிவித்தார்.

கொதிப்படைந்த தொண்டர்கள் விஜயகாந்த் முன்னிலையிலே கொடிகளை எரிக்கமுயற்சி செய்தனர். கொடி எரிக்க முயன்ற ரசிகர்களை விஜயகாந்த் கண்டித்தார்.

கொடி எரிக்க முயற்சித்தவர்களை அருகில் இருந்த ஒட்டேரி போலீசார் பிடிக்கசென்றனர். அதற்குள் ரசிகர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X