For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் தனி ஆள் இல்லை: கார்த்திக்

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

என் பின்னால் லட்சோப லட்சம் இளைஞர் சக்தி உள்ளது. நான் தனி ஆள் இல்லைஎன்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

நடிகர் கார்த்திக் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரசாரத்தைஒருவழியாகத் துவக்கிவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர்நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் தனதுபிரசாரத்தை கார்த்திக் தொடங்கினார்.

இவரை இங்கு வர விடாமல் தடுக்க போலீசார், உளவுப்பிரிவு, அடாவடி ஆசாமிகள்ஆகியோர் மூலம் அதிமுக தலைமை முயன்றது. இதனால் ஸ்டண்ட் மாஸ்டர்கள்பாதுகாப்போடு இங்கு வந்தார் கார்த்திக்.

காத்திக்குடன் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்களும் வந்தனர்.ஆனால், சில கார்களை மட்டுமே அனுமதித்த போலீசார் பிற கார்களைத்தடுத்துவிட்டனர்.

இதையடுத்து ஒரு சிலருடன் தேவர் சமாதிக்குச் சென்று வணங்கிய கார்த்திக் பின்னர்ராமநாதபுரம், முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, இளையான்குடி, சிவகங்கை ஆகிய பகுதிகளில்கடந்த இரு நாட்களாக சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போதுஅவர் பேசுகையில்,

நமது இயக்கம் தியாகிகளால் உருவானது. யாரையும் நாம் காட்டிக் கொடுக்கமாட்டோம். அது நாகரீகம் அல்ல. நாகரீகம் கருதி நான் சில உண்மைகளைசொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறேன்.

நமக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். சுய மரியாதையை விட்டுக் கொடுக்கமாட்டோம். ஏமாந்தது போதும், இனிமேல் யாரும் ஏமாறக் கூடாது. யாருக்கும் நாம்அடிமை இல்லை.

சிங்கமென சீறி வாருங்கள். நான் தனி ஆள் இல்லை, என் பின்னால் பெரும் மக்கள்சக்தி உள்ளது. லட்சோப லட்சம் இளைஞர் சக்தி உள்ளது. நம் இயக்கத்தின் கடமை,மக்களுக்கு நிரந்தரமான வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதுதான்.

கார்த்திக் யாருக்கும் அஞ்சியது கிடையாது.முன் வைத்த காலை பின்வைத்து எனக்குப்பழக்கம் இல்லை. எனக்கு விலை எதுவும் கிடையாது. அன்பு, நியாயம், தர்மம்தான்என் விலை.

எப்போதுமே ஒரே பேச்சுதான். மக்கள் நலனுக்காகததான் அரசியலுக்கு வந்துள்ளேன்.வரும் தேர்தலில் பார்வர்ட் பிளாக்குக்கு வாக்களியுங்கள் என்றார் கார்த்திக்.

கமிஷன் அழைப்பு- சென்னை திரும்பினார்

இந் நிலையில் நேற்றிரவு மதுரையில் தங்கிய கார்த்திக் இன்று மீண்டும்இளையான்குடி, சிவகங்கைப் பகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருந்தார்.

ஆனால், தேர்தல் சின்னம் தொடர்பாக கார்த்திக்கை தேர்தல் கமிஷன் அதிகாரிகள்ஆலோசனைக்கு அழைத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் தனதுபிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புவதாகத் தெரிகிறது.

கார்த்திக் கட்சியின் புலிச் சின்னத்தை முடக்க அதிமுகவின் மறைமுக உதவியோடுநீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டிருப்பதும், அது தொடர்பாக தேர்தல்ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X