For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசை ஆதரித்து எதிர்க்கும் வைகோ!

By Staff
Google Oneindia Tamil News

அரியலூர்:

1980ல் எம்.ஜி.ஆருக்கு மக்கள் மகுடம் சூட்டி சரித்திரம் படைத்ததைப் போல வருகிறதேர்தலிலும் புதிய சரித்திரம் மீண்டும் அரங்கேறும் என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கூறியுள்ளார்.

அரியலூரில் அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்து வைகோ பேசுகையில்,1980ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் முடி சூட்டினார்கள். புதியசரித்திரம் படைத்தார் புரட்சித் தலைவர்.

அதேபோன்ற எழுச்சி, உற்சாகம் இப்போதும் காணப்படுகிறது. மீண்டும் அந்தசரித்திரம் அரங்கேறும்.

தமிழகத்தில் இன்று மகிழ்ச்சி நிலவுகிறது. மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள், சட்டம்ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குறைந்த விலையில் ரேஷன் அரிசியைக் கொடுத்துவருகிறது ஜெயலலிதா அரசு.

ஆனால் இன்று திமுக தலைவர் கருணாநிதி ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்களாகஎடுத்து விட்டுக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்தால் 2 ரூபாய்க்கு கிலோ அரிசிகொடுப்பார்களாம்.

சுனாமித் தாக்குதலின்போது நிவாரண உதவிகளுக்காக ரூ. 9,800 கோடி நிதியைமத்திய அரசிடம் கேட்டார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தமிழக அரசு கேட்டதொகையை மத்தியஅரசு தரவில்லை. இதற்குக் காரணம் திமுக தலைவர்.

பிரதமர் கொடுக்க முன்வந்தும் அவரைக் கொடுக்க விடாமல் தடுத்தனர் திமுகவினர்.கன, மழை வெள்ளத்தினால் தமிழகம் தத்தளித்து தடுமாறியபோதும் நிவாரண நிதியாகரூ. 13,850 கோடி தர வேண்டும் என மத்திய அரசிடம் முறையிட்டது தமிழக அரசு.

பிரதமரை நேரிலேயே போய் பார்த்து ஆறரை கோடி தமிழ் மக்கள் சார்பில்கோரிக்கையும் விடுத்தார் ஜெயலலிதா. ஆனால், மத்திய அரசு கொடுத்ததோ ரூ. 1,000கோடி மட்டுமே.

அதற்கு மேல் கொடுக்க விடாமல் தடுத்து விட்டார் கருணாநிதி.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம்உத்தரவிட்டது. ஆனால் அதை எதிர்த்து சட்டத் திருத்தம் கொண்டு வந்து விட்டதுகேரள அரசு.

சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு. மத்தியிலும் காங்கிரஸ்அரசுதானே உள்ளது, தமிழக மக்கள் நலனுக்காக கேரளாவின் முயற்சிகளை அவர்கள்தடுத்து நிறுத்தியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?

அப்படியானால் அவர்களுக்கு தமிழக மக்கள் தேவையில்லை என்றுதானே அர்த்தம்?(இப்படிப்பட்ட பிரதமருக்கும், மத்திய அரசுக்கு மதிமுக ஏன் ஆதரவு தந்துகொண்டிருக்கிறது??)

இன்று திமுகவில் இருக்கும் தொண்டர்கள் மனம் உடைந்து, நொறுங்கிப் போய்இருக்கிறார்கள். எப்படியெல்லாம் வளர்ந்த கட்சி இன்று குடும்பக் கட்சியாக மாறிவிட்டதே என்று சுக்கல் சுக்கலாக நொறுங்கிப் போய் இருக்கிறார்கள் தொண்டர்கள்என்றார் வைகோ.

வைகோ பிரச்சாரத்தில் மாற்றம்:

இதற்கிடையே வைகோவின் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படிநாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர்த் தொகுதிகளில் வைகோதீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார்.

வைகோ தனது வட மாவட்ட சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குவதாக இருந்தது.ஆனால் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை நகர தொகுதிகளில்வைகோ இன்று பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 3 மணிக்கு பிரசாரத்தைதொடங்கும் வைகோ பெரம்பூர், புரசைவாக்கம், பூங்காநகர், ஆர்.கே.நகர், ராயபுரம்,துறைகம் ஆகிய தொகுதிகளில் பேசுகிறார்.

17ம் தேதி காலை 10 மணிக்கு மைலாப்பூர், தியாகராய நகர், சைதாப்பேட்டை,ஆலந்தூர், பிற்பகல் 3 மணிக்கு அண்ணா நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில்பிரசாரம் மேற்கொள்கிறார்.

18ம் தேதி காலை 10 மணிக்கு வில்லிவாக்கம், பூந்தமல்லி, பிற்பகலில் தாம்பரம்தொகுதிளில் பிரசாரம் செய்து பேசுகிறார் வைகோ. இதைத் தொடர்ந்து 19ம் தேதிமுதல் வட மாவட்ட சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கிறார் வைகோ.

மே 2ம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைவர் போட்டியிடும் சேப்பாக்கம்,ஸ்டாலின் போட்டியிடும் ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.பிற்பகலில் எழும்பூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்வைகோ. 6ம் தேதி சிவகாசியில் நிடக்கும் பொதுக் கூட்டத்துடன் தனது பிரசாரத்தைநிறைவு செய்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X