For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.இ. ரேங்க் பட்டியல் வெளியீடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொறியியல் மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம்வெளியிட்டுள்ளது. முதல் 3 இடங்களையும் மாணவர்களே பெற்றுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 235 பொறியியல்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களில் சேரவுள்ள மாணவ,மாணவியருக்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்றுவெளியிட்டது.

பிளஸ்டூ மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை இணைத்து ரேங்க்பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படிவேலூர் சத்துவாச்சேரியைச் சேர்ந்த மாணவன் சுபாஷ் நேரு 300க்கு 298.25மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப்பெற்றார்.

இவர் எல்.கே.ஜி. படித்ததில் இருந்தே அனைத்து வகுப்புகளிலும் முதல் ரேங்க்தான்பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்பாக்கம் கிருபாகரன் 298.17 பெற்று 2வது ரேங்க்கும், சென்னை பழவந்தாங்கல்விஜய் வரதராஜ் 298.08 மதிப்பெண்களுடன் 3வது ரேங்க்கும் பெற்றனர்.

கோவை மாணவர் சபரீஷ் 297.77 மதிப்பெண்களுடன் 4வது ரேங்க் பெற்றார். 5வதுரேங்க்கை சென்னை ஆர்.எம். மது (297.60) பெற்றார்.

முதல் பத்து ரேங்க்குகளில் ஒரே ஒரு மாணவிதான் (வேலூர் மிருனாளினி)இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வொகேஷனல் பிரிவில் மேட்டூர் மாணவர் வசந்தகுமார் முதலிடத்தையும், பெரம்பலூர்ஐயப்பன் 2வது ரேங்க்கையும், சென்னை அரவிந்த் 3வது ரேங்க்கையும் பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் விஸ்வநாதன், பி.இ. படிப்புகளில்சேருவதற்காக மொத்தம் 64,302 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் பொதுப் பிரிவினர் 8501, பிற்பட்டோர் 35,762, மிகவும்பிற்படுத்தப்பட்டோர் 12,052, தாழ்த்தப்பட்டோர் 7,753, பழங்குடியினர் மற்றும் மலைஜாதியினர் 229 பேர் ஆவர்.

ரேங்க் பட்டியலைப் பார்க்கும்போது 290க்கும் மேலான மதிப்பெண்களைப்பெற்றவர்கள் 121 பேர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 75 ஆக மட்டுமேஇருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் 10மதிப்பெண்கள் வரை குறைந்துள்ளது.

எனவே விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் அரசு ஒதுக்கீட்டின் கீழ்பி.இ. சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கவுன்சிலிங் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

மருத்துவ கவுன்சிலிங் முடிந்தவுடன் பொறியியல் கவுன்சிலிங் தொடங்கும் என்றார்விஸ்வநாதன். இதற்கிடையே, ரேங்க் பட்டியலைக் காண அண்ணாபல்கலைக்கழகத்தின் இணைய தளம் மூலமாகவும் வசதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அந்த இணையதளம் இயங்கவே இல்லை. நேற்று காலை ரேங்க் பட்டியல்வெளியான நிமிடம் முதல் இணையதளத்தை நூற்றுக்கணக்கான மாணவர்கள்மொய்த்தனர். ஆனால் இணையதளம் ஓபன் ஆகவில்லை. இதனால் மாணவர்கள்பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

இந்தத் தகவல் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுச் சென்ற துணைவேந்தர்விஸ்வநாதனுக்குப் பறந்தது. அவர் உயர் அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்துபிரச்சினை குறித்து விசாரித்தார்.

உடனடியாக சரி செய்யுமாறும் உத்தரவிட்டார். இருப்பினும் இரவு வரைஇணையதளத்திற்குள் நுழையவே முடியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X