• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாளை சட்டசபை கூடுகிறது: பட்ஜெட் தாக்கல்அவையில் பளிச் மாற்றங்கள்- கேமராக்கள்

By Staff
|

சென்னை:

படு பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.நாளையே 2006-07ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

திமுக அரசு அமைந்த பின்னர் கடந்த மே 24ம் தேதி முதலாவது சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கி 31ம்தேதியுடன் முடிவடைந்தது. இந் நிலையில் நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. நாளை காலை 10மணிக்கு நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி கருணாநிதியும், அன்பழகனும் கடந்த சில நாட்களாக தீவிரஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர். துறை வாரியாக ஒவ்வொரு அமைச்சரும் தீவிர ஆய்வுகளில்ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் நேற்று கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டமும் கூடியது. அப்போது பட்ஜெட்டுக்குஇறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் பல்வேறு பரபரப்பான சூழ்நிலையின் பினனணியில்கூடுவதால் கூட்டத் தொடர் முழுவதும் பரபரப்புகளுக்குக் குறைவிருக்காது.

இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டதை பெரிய பிரச்சினையாக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இது சூடானவாக்குவாதங்களுக்கும், ரகளைக்கும் அடிகோல வாய்ப்புண்டு.

மேலும் என்.எல்.சி. விவகாரத்தையும் அதிமுக கிளப்பும் எனத் தெரிகிறது. இதைத் தவிர உள்ளாட்சித் தேர்தலைதள்ளிப் போட திமுக அரசு முயலுவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இதையும் அதிமுக கிளப்பும்.

ஜெ. மீது நடவடிக்கையா? சபாநாயகர்:

இந் நிலையில் சபாநாயகர் ஆவுடையப்பன் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பெரிய அறையாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டு ஓ.பன்னீர் செல்வம்கடிதம் கொடுத்தார். அதிமுக கொறடா செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு பெரியஅறையாக ஒதுக்க வேண்டும் என்று கோரி கடிதம் தந்தோடு கூடவே வரைபடத்தையும் கொடுத்தார்.

ஆனால், அந்தக் கோரிக்கையை வாபஸ் பெற்றுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் எழுத்துப்பூர்வமாகஅவர் எதையும் தெரிவிக்கவில்லை.

இருக்கைகளை மாற்றி அமைக்க சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. இல்லை என்று ஜெயலலிதாகூறுகிறார். நீதிமன்ற ஆணையை குறிப்பிடாமல் அவர் குற்றம் சாட்டுகிறார். இல்லை என்றுஅவர் கூறும் அவர் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். சபாநாயகரின் அதிகராத்தில் நீதிமன்றம்குறுக்கிடக் கூடாது என்று அரசியல் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபைத் தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்து கடிதம்ஏதும் கொடுக்கவில்லை. முதல்வர் கோரிக்கையை ஏற்றுத் தான் அவர்கள் அவையில்அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டம் சுமூகமாக, பிரச்சினைகள் இன்றி நடக்கும் என நினைக்கிறேன்.உறுப்பினர்கள் தொகுதிப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றார்.

ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு அவையை களங்கம் செய்ததாகக் கருதிநடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டபோது, அது குறித்து யோசித்து முடிவெடுப்போம்என்றார் ஆவுடையப்பன்.

சட்டசபையில் பளிச் மாற்றங்கள்:

கடந்த கூட்டத் தொடரில் முதல்வர் கருணாநிதியை அடிக்கப் பாய்ந்து கலாட்டா செய்தார் அதிமுக எம்எல்ஏசேகர்பாபு.

இதையடுத்து சட்டசபையில் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. ஆளும்கட்சி வரிசைக்கும் எதிர்க் கட்சிவரிசைக்கும் இடையே மிக அகலமான மேஜை போடப்பட்டுள்ளது. இதனால் ஆளும் தரப்பில் இருப்பவர்கள்மீது எதிர் தரப்பினர் பாய்ந்து போய் தாக்குவது சாத்தியமில்லை. இந்த மேஜை அமைப்பைத் தான் முன்னாள்முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார்.

இந் நிலையில் சட்டசபையில் இருக்கை மாற்றம் குறித்து நிருபர்களை நேரில் அழைத்துச் சென்றுகாண்பிக்கப்பட்டது.

அதன்படி, சபாநாயகர் இருக்கைக்கு வலதுபுறம் முதல்வர் கருணாநிதிக்கும், அவை முன்னவருக்கும் இடம்ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நேர் எதிரே எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்குஇருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான இடைவெளி முன்பை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 15 அடி இடைவெளி உள்ளது. அதேபோல அமைச்சர்கள் 14 பேரும், அவர்களுக்கு எதிரேஎதிர்க்கட்சியினர் 14 பேரும் அமரும் வகையில் முன்வரிசை இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளன.

8 உறுப்பினர்கள் இருக்கும் இடம் முன்பு சபாநாயகர் பார்வையில் படாத வகையில் இருந்தது. தற்போது அங்குகேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பத்திரிக்கை நிருபர்களுக்கான இடம் சுருக்கப்பட்டு விட்டது. அங்கும் எம்.எல்.ஏக்களுக்கு இடம்ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் முன்பு 30 நிருபர்கள் வரை அமரமுடியும். தற்போது இது 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு முதல் மாடியில் இடம்தரப்பட்டுள்ளது.

மொத்தத்தில் எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் முதல்வருக்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும், உறுப்பினர்கள்அத்தனை பேரையும் சபாநாயகர் கவனிக்கும்படியாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகயைபரபரப்பான நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X