For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் கதறி அழுத துரைமுருகன்-கண்ணீர் விட்ட முதல்வர், அமைச்சர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மறுபிறவி என்று ஒன்று இருந்தால் கலைஞரின் தம்பியாக பிறக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகன் சட்டசபையில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர்மீண்டும் பணிக்குத் திரும்பிய அமைச்சர் துரைமுருகன், நேற்று தனது துறையான பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கையை சமர்ப்பித்தார்.

அதன் பின்னர் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்தின் இறுதியில், பதில் அளிக்க எழுந்தார்துரைமுருகன். முதலில் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துப் பேச ஆரம்பித்தார். எனக்கு புதுவாழ்க்கையை கொடுத்துள்ளார் கலைஞர்.

நான் இன்று உயிருடன் இருப்பதற்கு அவர் செய்த உதவிகள் தான் காரணம் என்று கூறிய துரைமுருகன் அதற்குமேல் பேச முடியாமல் குமுறலுடன் விசும்பத் தொடங்கினார்.

இதைப்பார்த்த சக அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள், துரைமுருகன்பதில் உரை அளிக்க வேண்டாம். உடல் நலம் தான் முக்கியம், அவரை அமரச் சொல்லுங்கள் என்று குரல்கொடுத்தனர். துரைமுருகன் அழுவதை பார்வையாளர் மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அவரதுகுடும்பத்தினரும் அழத் தொடங்கினர்.

பின்னர் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு துரைமுருகன் தொடர்ந்து பேசினார். அவர் கூறுகையில்,

ஒருவித மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் நான் இங்கே நிற்கிறேன். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் நான்உடல் நலம் பெற்று இந்த அவைக்குத் திரும்பியபோது என் தம்பி மீண்டும் வந்துவிட்டான் என்று பூரித்துபுளகாங்கிதம் அடைந்தார் என் தலைவர். எதிர்க் கட்சி உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தீர்கள். மேஜைகளைதட்டி வரவேற்றீர்கள். உங்களுக்கு நன்றி.

வாழ்த்தை ஒயிட்டிலும் பிளாக்கிலும் தெரிவித்தார்கள். அவர்களுக்கும் நன்றி. மந்திரியாக அல்ல, உயிருள்ளஉருவமாக நான் இங்கே நிற்கக் காரணமே என் தலைவர் தான் (குரல் தழுதழுக்க அழு ஆரம்பித்தார்துரைமுருகன்).

எனது நன்றிகளையெல்லாம் கலைஞருக்கு செலுத்த விரும்புகிறேன். அவரால் தான் இந்த வாழ்க்கை எனக்குமீண்டும் கிடைத்துள்ளது. எனக்கு கவுரவம், அந்தஸ்து எல்லாம் தந்தது கலைஞர் தான். 8 முறை வேலூரில் நிறுத்திஜெயிக்க வைத்து என்னை பலமுறை அமைச்சராக்கினார்.

சில மாதங்களுக்கு முன் லேசான மயக்கம் வந்தது. அதை உணர்ந்த முதல்வர் உடனே மருத்துமனையில்சேர்த்தார். நான் வலி பொறுத்ததைவிட எனக்காக அவர் துன்பப்பட்டது அதிகம். இன்று இதயத்தில் டைப்புநீங்கிவிட்டது. ஆனால், நன்றி என்ற அடைப்பு என் இதயத்தில் இருக்கிறது. என் பரம்பரை கலைஞரை மறக்காது.

எனது பெற்றோர்கள் என்னை இந்த உலகுக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் தலைவர் கலைஞர் எனக்கு இரண்டுமுறை மறுபிறப்பைக் கொடுத்துள்ளார். முதல் பிறப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு. கொடைக்கானலில் நடந்தகட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி சென்று கார் முலம்கொடைக்கானல் செல்ல ஆயத்தமானேன்.

ஆனால் தலைவர் கூப்பிட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் போ என்று அறிவுறுத்தினார். நானும் அப்படியேசெய்தேன். அடுத்த நாள் காலை செய்தியில், நான் செல்ல திட்டமிட்டிருந்த மலைக்கோட்டை ரயில்விபத்துக்குள்ளாகி, நான் பயணம் செய்வதாக இருந்த கம்பார்ட்மென்ட்டில் இருந்தவர்கள் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை என செய்தி வந்தது.

அவர் அருள்வாக்கு சித்தர் அல்ல. ஆனாலும் கூறினன். இந்த முறை இதய அறுவை சிகிச்சை செய்து கொள்என்று அறிவுரை வழங்கினார். தட்டாமல் ஏற்றேன். இப்போது மறு பிறப்பு எடுத்துள்ளேன். எனக்கு இன்னொருபிறப்பில் நம்பிக்கை இல்லை. ஆனால் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நான் கலைஞரின் தம்பியாகபிறக்க விரும்புகிறேன் என்று கூறி விட்டு மீண்டும் அழத் தொடங்கினார் துரைமுருகன்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், நான் மருத்துவமனையில் இருந்தபோது துரை வந்துவிடுவான்,துரைமுருகனுக்கு ஒன்றும் ஆகாது என்று தூக்கத்தில் கூட முதல்வர் சொன்னதாக அண்ணியார் (தயாளுஅம்மாள்) என்னிடம் சொன்னார். அப்போது குரல் தழுதழுக்க கதறியழுதார் துரைமுருகன்.

அதைப் பார்த்த திமுக பெண் எம்எல்ஏக்கள் அனைவரும் கண்ணீர் விட்டனர். அவரை பேச வேண்டாம் என்றுமுதல்வர் கருணாநிதி தடுத்தார். அவரை அமரச் செய்யுமாறு ஆற்காடு வீராசாமியிடம் சொன்னார். ஆனாலும்துரைமுருகன் தொடர்ந்து அழுதபடியே பேச முயல, கண்ணீருடன் அவரைப் பார்த்த கருணாநிதி உட்காருமாறுசைகை செய்தார்.

இதைக் கண்டு அமைச்சர்களும் அழ, எதிர்க் கட்சியினரும் கண்கலங்கிவிட, மாடத்தில் அமர்ந்திருந்ததுரைமுருகனின் குடும்பத்தினர் சத்தம் போட்டு அழ ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் சபையில் இறுக்கம் ஏற்பட்டது. பின் டிராப் சைலன்சுடன் அவை அமைதியில் மூழ்கிவிட, துரைமுருகன்தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, அமைச்சர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது பதிலுரையை படித்ததாக சபை எடுத்துக் கொள்ள வேண்டும் எனறுசபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.

அதே போல காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சன், அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் எழுந்து, உடல் நிலைஇன்னும் முழுமையாக தேறாத நிலையில் துரைமுருகன் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதே நல்லது. அவர்பதிலுரையை தந்ததாக எடுத்துக் கொள்கிறோம். அவர் அமர வேண்டும், உடல் நிலையை கவனித்துக் கொள்ளவேண்டும் என்றனர்.

இதை ஏற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் துரைமுருகனின் பதிலுரை அச்சடிக்கப்பட்டு அனைத்துஉறுப்பினர்களுக்கும் தரப்பட்டுள்ளது. எனவே பதிலுரை படிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளுமாறுஉத்தரவிட்டார்.

அழுதபடியே அமர்ந்திருந்த துரைமுருகனை கட்சி பாகுபாடின்றி அத்தனை உறுப்பினர்களும் நெருங்கிச் சென்றுஆறுதல் கூறி அவரை அன்பால் அரவணைக்க அதைக் கண்டு கலங்கிப் போய் கண்களைத் துடைத்தபடியேஅமர்ந்திருந்தார் துரைமுருகன்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதியும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே காணப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X