For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லை பெரியாரில் கடற்படையை விட்டு ஆய்வுகேரளா-மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முல்லைப் பெரியாறு அணையை கொச்சியில் உள்ள கடற்படை நிபுணர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்ததற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடற்படை நிபுணர்கள் பார்வையிடும் முன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருணாநிதிபேசினார். அப்போது, முல்லைப் பெரியாறு அணையை கொச்சியைச் சேர்ந்த கடற்படை நிபுணர்கள்பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Naval men inspecting Mullai Periyar Dam
கேரள அரசின் இந்த செயல் முழுக்க முழுக்க சட்டவிரோதமான, அத்துமீறல் செயல் ஆகும். முல்லைப் பெரியாறுஅணை தமிழக அரசுக்குச் சொந்தமானது. தமிழக அரசின் பராமரிப்பில்தான் முல்லைப் பெரியாறு அணைஉள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல், கேரள அரசு தன்னிச்சையாக இப்படிப்பட்டஅத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது.

உச்சநீதிமன்றம் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாமல்இப்படிப்பட்ட சட்டவிரோத செயல்களில் கேரள அரசு ஈடுபட்டு வருவது வருத்தம் தருகிறது.

கேரள அரசின் இந்த அத்துமீறல் செயலை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளேன்.

கேரள அரசின் இந்தப் போக்கு தொடர்ந்தால் இரு மாநில உறவுகளுக்கும் அது பங்கம் விளைவிப்பதாகஅமையும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்களின் மனக் கொந்தளிப்பை அதிகரிக்கும் வகையில்கேரள அரசு நிடக்குமானால், டெல்லியில் வருகிற 29ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழக அரசுபங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.

எனவே பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் உடனடியாகத் தலையிட்டு கேரளஅரசின் சட்டவிரோத, அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்கருணாநிதி.

இந்த அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என பல நிபுணர் குழுக்கள் கூறிவிட்டன.இதையே உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. ஆனால், தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில் 136அடிக்கு மேல் நீரை சேமிக்க விடாமல் கேரளம் தடுத்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X