For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் புயலை கிளப்பிய முல்லை பெரியாறு

By Staff
Google Oneindia Tamil News

சென்னைமுல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்றுகடும் விவாதம் நடந்தது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார்.

அப்போது, முல்லைப் பெரியாறு பிரச்சினை காரணமாக தமிழக, கேரள எல்லையில்மறியல் போராட்டம் நடைபெறுகிறது. நமது உரிமையை கேரளாவிடம் விட்டுக்கொடுத்து விடக் கூடாது என்பதற்காக இப்போராட்டம் நடைபெறுகிறது. இதனால்அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

இந்தப் பிரச்சினையில் இனியும் பேச்சுவார்த்தை நடத்தி எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே டெல்லி பேச்சுவார்த்தை குறித்த விவரத்தை இந்த அவையில்தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு என்ன வாக்குறுதியை அளித்தது? கேரளா என்னசொன்னது என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

சபையின் இதர அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இப்போது இதுகுறித்து விவாதிக்கவேண்டும். முதல்வர் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்றார்.

அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன், உங்களது வேண்டுகோள் ஆய்வில் உள்ளதுஎன்றார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

அதற்கு சபாநாயகர், காலையில்தான் ஒத்திவைப்பு தீர்மானத்தைக்கொடுத்திருக்கிறீர்கள். உடனே அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியஅவசியம் இல்லை. ஆய்வுக்குப் பிறகு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அதிகவினர் கோஷமிட்டனர். அப்போதுமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சபாநாயகரைப் பார்த்து கையை நீட்டியபடிகத்தினார்.

இதனால் கோபமடைந்த சபாநாயகர், உறுப்பினர் சண்கம் எல்லை மீறுகிறார். உங்களதுகட்சி பண்பு இதுதானா? எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையை நீட்டிப் பேசுகிறீர்கள்.அவை மரபு தெரியாமல் நடந்து கொள்கிறீர்கள். அனைவரும் அமருங்கள்.இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார்.

ஆனால் தொடர்ந்து அதிமுகவினர் எழுந்து நின்று கூச்சல் போட்டபடி இருந்தனர்.இதனால் அவையில் அமளி நிலவியது. அப்போது காங்கிரஸ் தலைவர் சுதர்சனத்தைபேச அழைத்தார் சபாநிாயகர்.

சுதர்சனம் பேசுதையில் தொடர்ந்து அதிமுகவினர் குறுக்கிட்டு கோஷம் எழுப்பினர்.கோஷத்துக்கு இடையே சுதர்சனம் பேசுகையில், நமது முதல்வர் இரு மாநிலங்களுக்குஇடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

இதை அரசியல்வாதிகள் தலையிட்டு கேரளா, தமிழ்நாடு இடையே உள்ளஇணக்கத்தை கெடுத்து விடக் கூடாது.

முல்லைப் பெரியாறு அணையிலிருது தண்ணீர் பெறுவது நமது உரிமை. அதைகேட்பது நமது கடமை. எனவே அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்என்றார்.

அப்போதும் அதிமுகவினர் கோஷமிட்டபடியே இருந்ததால் அவர்களுக்கு எதிராகதிமுக எம்.எல்.ஏக்களும் எழுந்து கோஷமிட ஆரம்பித்தனர். இதனால் அமையில்பெரும் அமளி ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், அவையை நடத்த ஒத்துழைப்பு கொடுங்கள்.இல்லாவிட்டால கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.

இந் நிலையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, பிரச்சினையை சுமூகமாகபேசித் தீர்க்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம்அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆனால் மே மாதம் வரை அமைதியாக இருந்த ஒரு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள்(அதிமுக ஆட்சி) என்றார்.

அப்போது அதிமுகவினர் கடும் ஆட்சேபனை தெரிவித்து கோஷமிட்டனர்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், 15.3.2006 அன்று கேரள அரசு சட்டத் திருத்தம்கொண்டு வந்தபோது அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. அப்போது ஏன் 142 அடிதண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு சுமூக தீர்வு காண முயற்சித்து வருகிறார் என்றார்.

பின்னர் பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், இப்பிரச்சினை தமிழ்நாட்டுமக்களின் உயிர் நாடிப் பிரச்சனை. இதில் அரசியலைக் கலக்காமல், அனைத்துக்கட்சிகளும் முதல்வருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதிமுகவினர்தேவையில்லாமல் குறை கூறி இதையும் அரசியலாக்க வேண்டாம் என்றார்.

அப்போது அதிமுக எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுந்து பேச ஆரம்பித்தார்.அவருக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, இப்பிரச்சினையில் அன்றைய முதல்வர்ஜெயலலிதா வழக்கு தொடர்ந்ததால் தான் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. கேரளசட்டமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்து ஜெயலலிதாஉச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

இதற்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். அதற்கு அரசின் நடவடிக்கை என்ன என்றுதெரிய வேண்டும் என்றார். இப்படியாக விவாதம் தொடர்ந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X