ஸ்ரீராம சமாஜம் மீது குண்டு வீச்சு-சிலை உடைப்பு
சென்னை:சென்னை:சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரபல ஸ்ரீராம சமாஜம் (அயோத்தியாமண்டபம்) மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர்காயமடைந்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம், ராஜகோபுரம் எதிரே காவல் நிலையம் அருகே முழு உருவப்பெரியார் சிலையை நிறுவ பீடம் அமைக்கப்பட்டு, சிலை மூடிய நிலையில்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சிலை திறப்பு இரண்டு நாளுக்கு முன்பே விஷமிகள்சிலையின் கழுத்து பகுதி துண்டித்தனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, ஸ்ரீரங்கத்தில் திராவிடர் கழகம்உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாலை மறியல், கடையடைப்புப் போராட்டத்தில்குதித்தன. மேலும், ராமர் படங்களுக்கு தீ வைத்து எரித்தும் தங்களது எதிர்ப்புகளைக்காட்டினார்.
இங்கு ஆரம்பித்த பிரச்சினை தற்போது தமிழகத்தின் வேறு சில பகுதிகளிக்கும் பரவிபதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில், ஸ்ரீ ராம சமாஜம் என்றபழம்பெரும் கோவில் உள்ளது. அயோத்தியா மண்டபம் என்று இது பக்தர்களால்அழைக்கப்படும். இங்கு ராமர் கோவில் உள்ளது. இதுதவிர முருகன், விநாயகர்,கண்ணன் ஆகிய கடவுள்களுக்கும் இங்கு வழிபாடு நடத்தப்படும். 52 ஆண்டுகளுக்குமுன்பு கட்டப்பட்ட கோவில் இது.
ஆசிட் கும்பல்:
நேற்று மதியம் 3.30 மணியளவில் பூஜை முடிந்ததும் கோவிலின் முன்பக்க கதவுபூட்டப்பட்டது. அப்போது 2 ஆட்டோக்களில் 15 பேர் கொண்ட கும்பல் அங்குவந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து பூணூ
பயங்கர ஆயுதங்களுடன் வந்த அக்கும்பலைப் பார்த்து பீதியடைந்த மக்கள்அங்கிருந்து ஓடினர். அப்போது அந்தக் கும்பல், ஆசிட் நிரப்பப்பட்டிருந்த பாட்டிலைதூக்கி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபம் மீது வீசியது. இதில் மண்டபத்தின்திரைச் சீலையில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை சில பக்தர்கள் நீர் ஊற்றிஅணைக்க முயன்றனர்.
பெட்ரோல் குண்டு:
அப்போது, இரண்டு பெட்ரோல் குண்டுகளையும் மண்டபம் முன்பு இருந்த சாமி சிலைமீது வீசி எறிந்தனர். பின்னர் திருச்சியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைஎதிர்த்து அவர்கள் கோபமாக கோஷமிட்டனர்.
தெருவிலும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும்பீதியும், பதட்டம் நிலவியது. போர்க்களம் போல அப்பகுதி காணப்பட்டது. அதிகமக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் அச்சாலையில், பெரும் நெரிசல்ஏற்பட்டது. பஸ் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
பின்னர் அந்தக் கும்பல் கோவில் வாசலில் பூணூ
கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடந்த இந்த பயங்கர தாக்குதலுக்குப் பின்னர்அக்கும்பல் படு சாதாரனமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றது. அயோத்தியாமண்டபத்தில் நடந்த பயங்கர தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறைஆணையர் லத்திகா சரண், கூடுதல் ஆணையர் ஜாங்கிட் உள்ளிட்ட காவல்துறைஅதிகாரிகள் விரைந்து வந்தனர்.
பாஜக, இந்து முன்னணி போராட்டம்:
அயோத்தியா மண்டபம் முன்பு நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய போலீஸார்குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைப் பற்றி அறிந்துதம் அயோத்தியா மண்டபம் முன்நூற்றுக்கணக்கான பாஜக, இந்து முன்னணி தொண்டர்கள் திரண்டு விட்டனர். இதனால்அங்கு பதட்டம் நிலவியது.
பாஜக மாநில பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில்பாஜகவினர் சாலை மறியலில் குதித்தனர். போலீஸார், குற்றவாளிகளைதனிப்படைகள் அமைத்துத் தேடி வருவதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவர்என்றும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தமிழிசை தனது போராட்டத்தைக்கைவிட்டார்.
எஸ்.வி.சேகர் ஆறுதல்:
தாக்குதலில் காயமடைந்த தண்டபாணி, முரளி ஆகியோரை அதிமுக எம்.எல்.ஏக்கள்எஸ்.வி.சேகர், வி.பி.கலைராஜன் ஆகியோர் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.அயோத்தியா மண்டபம் தாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் உள்ள அனைத்துமுக்கியக் கோவில்கள் முன்பும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நகரில் உள்ள பெரியார் சிலைகளுக்கும் பிற தலைவர்கள் சிலைகளுக்கும் பாதுகாப்புவழங்கவும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சேலத்தில் உள்ள சங்கர மடத்திற்குள் புகுந்த தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பேர்மடத்தை சூறையாடி சாமி படங்கள், ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரின்படங்களை அடித்து நொறுக்கினர். அந்த ஐந்து பேரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
ஈரோட்டில் ராமர் சிலை உடைப்பு:
இதேபோல ஈரோட்டில் உள்ள ராகவேந்திரா கோவிலிலும் சில விஷமிகள் தாக்குதல்நடத்தியுள்ளனர்.
ஈரோடு காரை வாய்க்கால் பகுதி அக்ரகார வீதியில் ராகவேந்திரர் பிருந்தாவன்கோவில் உள்ளது. இங்கு நேற்று மாலை 5.10 மணியளவில் பூசாரி வெங்கடரமணன்பூஜை செய்து கொண்டிருந்தார்.
அப்போது 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அங்கு வந்தது. கோவிலுக்குள்புகுந்த அவர்கள் தடுத்து நிறுத்திய பூசாரியை பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டிதள்ளி விட்டு கோவிலுக்குள் புகுந்தனர். அப்போது இன்னொரு பூசாரி நரசிம்மன் ஓடிவந்து அவர்களைத் தடுக்க முயன்றார். அவரையும் அக்கும்பல் அடித்துத் தள்ளியது.பின்னர் ராகவேந்திரர் சன்னதிக்குள் புகுந்து அங்கிருந்த பூஜை பொருட்களைவெளியே தூக்கி வீசினர்.
அதேபோல, பிரகலாதராயர் சிலையை தூக்கி வெளியே வீசினர். ராமர் சிலையைபீடத்திலிருந்து பெயர்த்து வெளியே கொண்டு வந்து சுத்தியலால் உடைத்துசிதைத்தனர். ஊஞ்சல் மேலும் அலங்கார வளைவுகளையும் சேதப்படுத்தினர்.
இதைப் பார்த்து ஓடி வந்த கோவிலுக்கு அருகே கடை வைத்துள்ளபத்ரிநாராயணனையும் அக்கும்பல் தாக்கியது. அவரது கடையையும் அக்கும்பல்சூறையாடியது.
ராமர் படத்துக்கு செருப்பு மாலை:
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராமர் படத்துக்கு நடு ரோட்டில் வைத்துசெருப்பு மாலை போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர் காந்தி சிலை அருகே ராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு புதியஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரளாக வந்தனர்.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டஅவர்கள் ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். அதற்கு தீயும் இட்டுகொளுத்தினர்.
இத்தகவல் அறிந்ததும் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரும் கூட்டமாக அங்கு வந்தனர். அவர்களுக்கும்,ராமர் படத்தை அவமதித்தவர்களுக்கும் இடையே கடும வாக்குவாதம் நடந்தது.
இது பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் புதிய ராமர் படத்தை அவமதித்தவர்களில்ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
பின்னர் பாஜக உள்ளிட்ட அமைப்புகளின் தொண்டர்கள் சாலை மறியலில் குதித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக புதிய ஜனநாயக முன்னேற்றகழகம் அமைப்பைச் சேர்ந்தவெங்கடேஷ், மூர்த்தி, ரவிச்சந்திரன், பரசுராமன் ஆகியோர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஜிபி எச்சரிக்கை:
பெரியார் சிலை, வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்த சிலை உடைப்புகள், வழிபாட்டு தல தாக்குதல்கள் தொடர்பாக இதுவரைமாநிலம் ழுவதும் 38 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அயோத்யா மண்டபம் மீது குண்டு வீசிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, ஈரோட்டில்ராகவேந்திரா கோவிலில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடக் கழகத்தைச்சேர்ந்த மாவட்டச் செயலாளர் இளங்கோவன், அமைப்பாளர் குமரகுருபரன், இளைஞர் அணி செயலாளர்முருகானந்தம் மற்றும் ரஜினி சங்கர், அர்ச்சுனன், செல்லத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் அவர்கள் கைது செய்யப்படுவர்என டிஜிபி எச்சரித்துள்ளார்.