For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவின் கிராபிக்ஸ் பீதி: கருணாநிதி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முல்லைப் பெரியாறு அணை உடைவது போல கிராபிக்ஸ் படத்தை மக்களிடம் காட்டி கேரள அரசு பீதிஏற்படுத்துவது தவறான செயல். இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய கருவாச்சி காவியம் நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில்சனிக்கிழமை மாலை நடந்தது. இதில் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை கருணாநிதி வெளியிட்டார். உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், கருவாச்சி காவியம் தொடராக வந்தபோதே நான் அதைப் படித்து கருத்துசொல்லும் வாய்ப்பைப் பெற்றேன். ஆனாலும் கடந்த 2 நாட்களாக 300 பக்கங்களைக் கொண்ட இந்த நூலைஒவ்வொரு பக்கமாக படித்து பென்சிலால் கோடிட்டு உரை நிகழ்த்தும் தயாரிப்பை மேற்கொண்டேன்.என் வீட்டில் கூட, இப்போது படிப்பதைப் போல அப்போதே படித்திருந்தால் ஒரு பி.ஏவோ அல்லது எம்.ஏ.வோஆகியிருக்கலாமே என்றார்.

1991ல் திமுக அரசு கலைக்கப்பட்டபோது மறுநாள் ஒரு பத்திரிக்கையில் வைரமுத்து எழுதியிருந்தார். அடியேஅனார்கலி, உனக்குப் பிறகு இந்த நாட்டில் உயிரோடு புதைக்கப்பட்டது ஜனநாயகம்தான் என்று அதில்எழுதியிருந்தார்.

அவரையும், என்னையும் நீக்கமற இணைத்திட இந்த ஒரு வரி போதாதா? அந்த உணர்வு அடிப்படையில்தான்எங்கள் நட்பு மேலும், மேலும் இறுகி , உறுதியாகி, குறுதியாகியிருக்கிறது.

அவர் என்னை ஆண் காதலி என்றார். அதில் எனக்கு வருத்தம் இல்லை. புராண காலத்தில்தான் வாழ்கிறோமாஎன்ற சந்தேகம்தான் வருகிறதே தவிர வேறு வருத்தம் இல்லை.

அரசியலில் தனது நிலையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் கூட சமுதாய அடிப்படையில்பெரியார், அண்ணா, பாரதிதாசன் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர் வைரமுத்து. அதை தனது எழுத்திலும்காட்டியவர்.

இலங்கைத் தீவு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் அனைவரும் கொதித்துப் போயிருக்கிறார்கள். 2 முறைபிரதமர், சோனியா காந்தி, அர்ஜூன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளேன். சோனியா காந்தி 2 முறைகடிதம் எழுதியுள்ளார்.

தமிழர்களை அழிக்கும் ஆயுதங்களைத் தருவதில்லை என்று கூறியுள்ளார் சோனியா. இது எனக்குப் பெருமைஅல்ல, தமிழன் மனம் குளிரக் கூடிய செய்தி அது.

பயமுறுத்தினால்தான் பயப்படுவார்கள். கருவாச்சியை அவளது கணவன் கட்டையன் பயமுறுத்துவதாகஎழுதியுள்ளார். தெம்பு சொன்னால் தேற மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இப்போது முல்லைப் பெரியாறு அணையை கிராபிக்ஸ் மூலம் ஒன்றைப் பத்தாக்கி, பத்தை நூறாக்கி, நூறைஆயிரமாக்கி தந்திரக் காட்சி மூலம் அணை உடைந்து, 30 லட்சம் மக்கள் இடுக்கி போன்ற மாவட்டங்களில் சாகப்போகிறார்கள் என்று குடுகுடுப்பைக்காரன் போல சொல்கிறார்கள்.

பேச்சுவார்த்தை இன்னும் முற்றுப் பெறாததால், டெல்லியில் இரு மாநில அமைச்சர்கள் பேசுவார்கள் என்றுகூறியதால் கிராபிக்ஸ் போட்டுக் காட்டி மக்களை பயமுறுத்துகிறார்கள். இதைத்தான் அவர் இங்கு ஒப்பிடுவதாககருதுகிறேன். முல்லைப் பெரியாறு வட்டத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

மக்களுக்கு இப்படி பீதியை ஏற்படுத்தக் கூடாது என்று கேரள அரசை நான் வேண்டிக் கொள்கிறேன் என்றார்கருணாநிதி.

நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேராசிரியை சாரதா நம்பி ஆரூரன், முத்தையா ஆகியோர்வாழ்த்துரை நிகழ்த்தினர். கணவரால் கைவிடப்பட்ட, கணவர்களை இழந்த ஐந்து பெண்களுக்கு வைரமுத்துசார்பில் தலா ரூ. 20 ஆயிரத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

பின்னர் கருணாநிதிக்கு வைரமுத்து வெள்ளி பேனா, செங்கோலை அளித்தார். நிகழ்ச்சியில் கருணாநிதியின்துணைவி ராஜாத்தி அம்மாள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், பல கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்களும் கலந்துகொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X