• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

எனக்கு எதிராக சதி-தயாநிதி பரபரப்பு பேட்டி

By Staff
|

சென்னை:கட்சியில் உள்ள சிலர் சதி செய்து தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

ஊட்டிலிருந்து இன்று சென்னை வந்த மாறன் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,

மற்ற அரசியல்வாதிகளைப் போல என்னை நினைக்க வேண்டாம். கட்சி தலைமைக்கு எதிராகவோ, கட்சிக்கு எதிராகவோ பேச மாட்டேன். எனவே அது போன்ற தர்மசங்கடமான கேள்விகளை கேட்க வேண்டாம். நீங்கள் கேட்டாலும் பதில் கிடைக்காது.

தலைவரே விரும்பவில்லை என்ற பிறகு மந்திரி பதவியில் நீடிக்க விரும்பவில்லை. கடந்த 26 மாதத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றினேன். எனது துைறயில் 2.66 லட்சம் கோடி முதலீடு வந்தது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 47,000 கோடி ரூபாயை கொண்டு வந்தேன்.

கலைஞர் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. நிறைய திட்டங்கள் வந்தன. தொடர்ந்து வர வேண்டும்.

Dayanidhi Maran


மந்திரி பதவியில் இருந்து என்னை நீக்கியதற்காக வருத்தப்படவில்லை. ஆனால், கட்சிக்கு விரோதமாக நான் செயல்பட்டதாக அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டதும், தலைவரே என் மீது சந்தேகப்பட்டதும் தான் எனக்கு மிக வேதனையைத் தந்துவிட்டது.

கனவில் கூட கட்சிக்கும் தலைமைக்கும் நான் துரோகம் நினைத்ததில்லை. என்னைப் பற்றி யாரோ தவறான தகவல்களை தந்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் பக்கம் சென்று பார்த்தால் எனது துறை மூலமாக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் புரியும். ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் பேசும் வசதி கொண்டு வந்தேன். கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி முதல் ரோமிங் கட்டணத்தைய ரத்து செய்ய திட்டமிட்டிருந்தேன்.

மதுரை தினகரன் மீதான தாக்குதலால் நான் ராஜினாமா முடிவை எடுக்கவில்லை. சன் டிவிக்கும் தினகரனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அந்த சம்பவத்தை வைத்து என் பெயரைக் கெடுக்க ஒருவர் முயன்றுள்ளர். இந்த சம்பவத்தை காரணமாக வைத்து என்னை பதவி நீக்கம் செய்ய வைத்துள்ளார்.

அது யார் என்று நான் சொல்ல மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்.

அமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்த சோனியா காந்தி அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பதவி முக்கியமல்ல. அமைச்சராக இருப்பதும் இல்லாததும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.

எனது கட்சியான திமுகவுக்கோ தலைவர் கலைஞருக்கோ எந்த விதத்திலும் எதிராக செயல்பட மாட்டேன். ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது தான் மிகுந்த வருத்தத்தை தருகிறது.

கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் நான் திமுககாரன் தான். கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். நான் பிறந்தது திமுககாரனாத்தான். கட்சியை விட்டு நீக்கினாலும் திமுக தொண்டனாகவே சாவேன்.

விரைவில் கலைஞரை சந்திப்பேன். என் நிலையை விளக்குவேன். ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து பேசப் போவதில்லை.

ஆனால், கலைஞரை சந்திக்க இதுவரை எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அது ஏன் என்று தான் புரியவில்லை.

எங்கள் குடும்பத்துக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனக்கு ஸ்டாலின், அழகிரியோடு நல்ல நட்புறவு தான் உள்ளது.

கட்சியிடம் இருந்து என்னை ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு எனக்கு இதுவரை நோட்டீஸ் ஏதும் வரவில்லை. ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறு கணமே எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி விட்டேன்.

கட்சி எடுத்த முடிவு அது. அதற்கு கட்டுப்பட்டுவிட்டேன்.

அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் எம்பியாக தொடரவே விரும்புகிறேன். சென்னை மத்தியத் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து உழைக்க தயாராக இருக்கிறேன். அந்தப் பதவியில் இருந்து விலகச் சொன்னாலும் நான் தயார் என்றார் தயாநிதி.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு தயாநிதி தந்த பதில்கள்:

உங்களுக்கும் ஸ்டாலினுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்கிறார்களே?

தயாநிதி: எங்களுக்கிடையே உறவு நன்றாகவே இருக்கிறது.

கருணாநிதி மனம் இறங்கி உங்களை சமாதானப்படுத்தி மீண்டும் அமைச்சர் பதவி தந்தால் ஏற்பீர்களா

தயாநிதி: ஏற்க மாட்டேன்.

நீங்கள் காங்கிரசில் சேரப் போவதாக சொல்கிறார்களே...

தயாநிதி: (பலமாக சிரித்தபடி) யார் சொன்னது

மதுரை சம்பவம் நடந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினீர்களாமே?

தயாநிதி: இது பொய்யான தகவல். அப்போது நான் மக்களவையில் இருந்தேன் என்றார் தயாநிதி.

முன்னதாக நேற்றிரவு ஊட்டியிலிருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் திமுகவுக்கும், தலைவர் கலைஞருக்கும் என் மனதறிய துரோகம் நினைத்ததில்லை. இனியும் நினைக்க மாட்டேன்.

என் தாத்தாவும், என் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவில்லை. என்னைப் பதவி நீக்குவதும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதும் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நான் அவரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன்.

இந்த நேரத்தில் வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. மூன்றாண்டு காலம் இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நேர்மையாகவும், என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகவும், பணியாற்றி பலரது பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும், கட்சிக்கும், எனது இதயங்கனிந்த நன்றிகள் என்று கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

மற்ற அரசியல்வாதிகளைப் போல என்னை நினைக்க வேண்டாம். கட்சி தலைமைக்கு எதிராகவோ, கட்சிக்கு எதிராகவோ பேச மாட்டேன். எனவே அது போன்ற தர்மசங்கடமான கேள்விகளை கேட்க வேண்டாம். நீங்கள் கேட்டாலும் பதில் கிடைக்காது.

தலைவரே விரும்பவில்லை என்ற பிறகு மந்திரி பதவியில் நீடிக்க விரும்பவில்லை. கடந்த 26 மாதத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றினேன். எனது துைறயில் 2.66 லட்சம் கோடி முதலீடு வந்தது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 47,000 கோடி ரூபாயை கொண்டு வந்தேன்.

கலைஞர் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. நிறைய திட்டங்கள் வந்தன. தொடர்ந்து வர ேவண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X