பிளஸ்டூ தேர்வில் சுஷில்ஹரி பள்ளி சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:பிளஸ்டூ தேர்வில் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளி 3 பாடங்களில் மாநில அளவில் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளியில் படித்த விவேக் ராஜு 1,200 மதிப்பெண்களுக்கு 1,144 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலாவது மாணவராக வந்துள்ளார். இவர் பிரெஞ்சு பாடத்தில் 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதேபோல 1,130 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிஜந்தன், காமர்ஸ் மற்றும் பிசினஸ் மேத்ஸ் பாடங்களில் 200க்கு 200 பெற்றுள்ளார்.

பிளஸ்டூ தேர்வில் இந்தப் பள்ளி 100 சதவீத தேர்ச்சியையும் பெற்றுள்ளதாக பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற