For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் டூ: இந்துவுக்கு சமஸ்கிருத அறக்கட்டளைரூ. 1 லட்சம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:பிளஸ் டூ தேர்வில் சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்ததால் மாநிலத்திலே முதல் மாணவியாக வரும் வாய்ப்பை இழந்த இந்து ரேகாவுக்கு சமஸ்கிருத பாரதி அறக்கட்டளை சார்பில் ரூ. 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து சமஸ்கிருத பாரதி அறக்கட்டளை தமிழ்நாடு கிளையின் செயலாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

Indhurekhaபிளஸ் டூ தேர்வில் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக எடுத்து முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சமஸ்கிருத பாரதி அறக்கட்டளை ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறதப.

அதன்படி சமஸ்கிருத்தை மொழி பாடமாக எடுத்து 1,200க்கு 1,190 மதிப்பெண் எடுத்த திருச்சி சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்து ரேகாவுக்கு ரூ. 1 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

இவர் சமஸ்கிருதத்தில் 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அதோபோல் சமஸ்கிருத்தை மொழி பாடமாக படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கிய சென்னை முகில் நகர் டிஏவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சுவாதிக்கு ரூ. 60,000 வழங்கப்படும். இவர் ப்ளஸ் டூவில் மொத்தம் 1,187 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதேபோல் 1,186 மதிப்பெண் பெற்ற ஆதம்பாக்கம் எஸ்டிஏவி பள்ளி மாணவி பத்மலாவண்யாவுக்கும், கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவர் விஸ்வாந்த்துக்கும் ரூ. 40,000 பரிசு வழங்கப்படும்.

இவர்கள் அணைவருமே மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவியின் மதிப்பெண்ணை விட அதிகம் மதிப்பெண் எடுத்தவர்கள்.

விரைவில் இவர்களுக்கான பரிசு வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X