காதலன் வீட்டு முன் காதலி விஷம் குடித்து தற்கொலை
திருநெல்வேலி: காதலன் வீட்டு முன்பு காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாழையூத்து அருகே உள்ள அலங்காரபேரி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை. இவரது மகள் மெர்சி. இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
மெர்சி, ராஜவல்லிபுரத்தில் உள்ள தனது தாத்தா வள்ளுவன் வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது மெர்சிக்கும், தினகரன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
தினகரன் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். உறவினர்களான இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததற்கு, இரு வீட்டிலும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மெர்சி ஒரு ஆட்டோவில் தாத்தா வீட்டில் இருந்து காதலன் தினகரன் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த தினகரனின் பெற்றோர் இவர்களின் காதலை கண்டித்துள்ளனர். அத்துடன் படிக்கின்ற வயதில் நன்றாக படியுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மெர்சிக்கும், தினகரனின் பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த மெர்சி அந்த இடத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை தினகரனின் தாய் ராஜம்மாள் அங்குள்ள ஒரு தனியார் மருத்துமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மெர்சி பரிதாபமாக இறந்தார்.
காதலன் வீட்டு முன் காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications