For Daily Alerts
Just In
மீண்டும் பக்னர் பராக், பராக்!

சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து தவறான முடிவுகளைக் கூறி, இந்தியாவின் வெற்றி வாய்ப்பை சீர்குலைத்ததாக சர்ச்சையில் சிக்கினார் பக்னர். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மீதமுள்ள போட்டிகளிலிருந்து பக்னர் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு பக்னர் மீண்டும் திரும்பி வருகிறார்.
வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடுவராக பக்னர் பணியாற்றுவார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
சிட்னி சர்ச்சைக்குப் பின்னர் மீண்டும் பக்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவதால் அவரது தீர்ப்புகள் குறித்து புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.