For Daily Alerts
Just In
கார் மோதி கூடன்குளம் அணுமின் நிலைய அதிகாரி பலி
அஞ்சுகிராமம்: கன்னியாகுமரியில் பஸ் ஏற நின்ற கூடன்குளம் அணுமின் நிலைய அதிகாரி கார் மோதி பலியானார்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்பவர் தூத்துக்குடி மாவட்டம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த அண்ணாமலை கார்த்திக்.
கடந்த 9ம் தேதி கன்னியாகுமரியை சுற்றி பார்த்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக கன்னியாகுமரி விவேகனந்தபுரம் ஜங்ஷனில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வந்த கார், கார்த்திக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.