
ஒரு மாதமாக தூத்துக்குடியில் தவிக்கும் சிறுவன்
தூத்துக்குடி: சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவன் தூத்துக்குடியில் கடந்த ஒரு மாதமாக தவித்து வருகிறான்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்து சிறுவனை போலீசார் பிடித்து அங்குள்ள முத்துக்குவியல் காப்பகத்தில் ஓப்படைத்தனர். அவர் தனது பெயர் விஜய் என்றும் தனது தந்தை பேச்சிமுத்து சென்னையில் பால் வியாபாரம் செய்து வருவதாகவும் கூறினார்.
ஆனால் வீ்ட்டின் முகவரியை தெளிவாக சொல்லத் தெரியவில்லை. மேலும் தன்னை சித்தி கண்ணம்மாள், அண்ணன் ராஜா, அக்காள் விஜயா ஆகியோர் அடித்து துன்புறுத்தியதால் சென்னையில் இருநது ரயில் ஏறி வந்து விட்டதாக கூறுகிறார்.
அவரது செயல் மற்றும் பேச்சு சிறிது மனநலம் பாதித்தவர் போல் இருப்பதால் போலீசார் அவரிடம் முழுவதுமாக எந்த விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்தவர் என்பதால் அவரை விரைவில் சென்னையில் உள்ள காப்பகத்தில் ஓப்படைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.