பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வாக அறிவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் பிப்ரவரி 18ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பெருவாரியான இடங்களைப் பெற்றன. முஷாரப்பின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - க்யூ பிரிவுக்கு பெரும் தோல்வி கிடைத்தது.
இந்த நிலையில் முழுமையான தேர்தல் முடிவுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பெனாசிரின் கட்சிக்கு 120 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. தனிப் பெரும் கட்சியாகவும் இக்கட்சி உருவெடுத்துள்ளது.
2வது இடத்தில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி உள்ளது. இக்கட்சிக்கு 90 இடங்கள் கிடைத்துள்ளன. முஷாரப் ஆதரவு பெற்ற முஸ்லீம் லீக் கட்சிக்கு 51 சீட்கள் கிடைத்துள்ளன.
முட்டாகிதா குவாமி மூவ்மென்ட் கட்சிக்கு 25 சீட்களும், அவாமி தேசிய கட்சிக்கு 13 இடங்களும், எம்எம்ஏ கட்சிக்கு 6 சீட்களும் வெற்றி கிடைத்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு 8 தொகுதிகள் கிடைத்துள்ளன. சுயேச்சைகள் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.