திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் ஜின்னா-வசந்தி ஸ்டான்லி

இத் தகவலை திமுக தலைமை இன்று அறிவித்தது.
திமுக, காங்கிரஸ் தலா இரு இடங்களிலும் மார்க்சிஸ்ட் ஒரு இடத்திலும் போட்டியிடவுள்ளது.
இதில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரு இடங்களில் ஒரு இடத்தை பாமக கோரி வரும் நிலையில் திமுக தனது வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து ராமதாசுக்கு எரிச்சலை மேலும் அதிகமாக்கியுள்ளது.
இம் முறை திமுக இரு இடங்களையும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கியிருப்பது குறி்ப்பிடத்தக்கது.
ராஜ்யபசா தேர்தல் குறித்து கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தையே நடத்தாமல் வேட்பாளர்கள் பட்டியலை திமுக அதிரடியாக அறிவித்துவிட்டது.
வசந்தி ஸ்டான்லி:
1962ம்ம் ஆண்டு பிறந்தவரான வசந்தி ஸ்டான்லியின் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். எம்.ஏ. (ஆங்கிலம்) பி.எட், பி.எல். படித்தவர்.
தமிழ்நாடு வணிக வரித்துறையில் உதவி வணிக வரி அலுவலராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் திமுகவில் இணைந்து திமுக தலைமைக் கழக பேச்சாளராகவும், தென் சென்னை மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவராகவும்,
மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும், தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளராகவும் இருந்தவர்.
தமிழ்நாடு திரைப்பட தணிக்கை குழு, மாநில சிறுபான்மை ஆணையம் ஆகியவற்றில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
தற்போது சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். (இது மத்திய அரசுச் செயலாளர் பதவிக்கு இணையானது).
வசந்தியின் கணவர் ஸ்டான்லி சென்னை மேற்கு மாம்பலத்தில் மருந்து நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஜி்ன்னா:
வேட்பாளரான ஜின்னாவின் முழுப் பெயர் அமீர் அலி ஜின்னா. 1941ம் ஆண்டில் திருவாரூரில் பிறந்தவர்.
பி.ஏ., பி.எல். படித்த இவர் 48 ஆண்டுகளாக திமுகவில் உள்ளார்.
திமுக தலைமை கழக வழக்கறிஞராவும், நிர்வாக குழு, பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். மிசா' சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்தவர்.
தமிழ்நாடு திரைப்பட தணிக்கை குழு உறுப்பினரா கவும், துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினராகவும் பதவி வகிததுள்ளார்.