போலி பாஸ்போர்ட்டில் இலங்கையிலிருந்து வந்த 2 பேர் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கையில் இருந்து வந்த 2 வாலிபர்கள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ஐயப்பன் (28), சிவகங்கையைச் சேர்ந்த ராமன் (29) ஆகியோர் கொழும்புவில் இருந்து வந்த விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். விமானநிலையத்தில் அவர்களது பாஸ்போர்ட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்த போது அவை போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஐயப்பனும் ராமனும் மலேசியாவில் வேலை பார்த்து வந்தனர். ஆனால் வேலையிலிருந்து விலகி சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து தங்களது நிறுவன உரிமையாளரிடம் பாஸ்போர்ட்களைக் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர் தர மறுத்து விட்டார். இதையடுத்து ஒரு ஏஜெண்டு மூலம் போலி பாஸ்போர்டுகளை வாங்கி ஊர் திரும்பியுள்ளனர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.