For Daily Alerts
Just In
அரபு நாடுகளில் பங்காரு அடிகளார்
சென்னை: அரபு நாடுகளில் பங்காரு அடிகளார் பயணம் மேற்கொண்டார்.
அரபு நாடுகளில் பங்காரு அடிகளாருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று கடந்த 17ம் தேதி அடிகளார் துபாய் சென்றார்.
3 நாட்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் பக்தர்களின் இல்லங்களுக்குச் சென்று ஆசி வழங்கினார் அடிகளார்.
ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்ச்சிய அடிகளார், துபாயில் கலச விளக்கு பூஜை, யாக வேள்வியையும் நடத்தினார். தமிழில் 1008 மந்திரங்கள் படிக்கப்பட்டு வேள்வி நடைபெற்றது.
இதில் 10,000 பேர் வரை திரண்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று காலை அவர் சென்னை திரும்பினார்.
அடிகளாருடன் அவரது மனைவி, மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.