For Daily Alerts
Just In
தென் கொரிய தூதரகம் முன் போராட்டம்-423 ஹூண்டாய் ஊழியர்கள் கைது
சென்னை: தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் கோரி தென் கொரிய துணைத் தூதரகம் முன் போராட்டம் நடத்திய சென்னை ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஊழியர்கள் 423 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனம் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. இதனால் அவ்வப்போது தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இந்த நிறுவனத்தின் இரண்டாவது ஆலையை திறந்து வைக்க முதல்வர் கருணாநிதி சென்றபோது வழியில் கூடி நின்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந் நிலையில் இன்று காலை 423 தொழிலாளர்கள் சென்னையில் உள்ள தென் கொரிய துணைத் தூதரகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ஹூண்டாய் ஒரு தென் கொரிய நிறுவனமாகும்.