நலவாரிய விவகாரம்-சட்டசபையில் மார்க்சிஸ்ட் வெளிநடப்பு
சென்னை: நல வாரியங்களை தொழிலாளர் துறையின் கீழ் கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ கோவிந்தசாமி பேசினார். முறைசாரா நல வாரியங்கள் உள்பட நலவாரியங்களை வருவாய்த் துறையில் இணைக்க அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
நல வாரியங்கள் மீண்டும் தொழிலாளர் நலத் துறையின் கீழ் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து அக்கட்சியின் மற்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முக்கியத்துவத்தை அதிகரிக்கவே வெளிநடப்பு செய்ததாக கோவிந்தன் தெரிவித்தார்.
திமுக தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதை கண்டித்து ஏற்கனவே வெளிநடப்பு செய்தது. தற்போது இன்று மீண்டும் வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.