மதுரை சிஎஸ்ஐ பிஷப் மீது மோசடி வழக்கு
மதுரை: மதுரையில் சிஎஸ்ஐ பிஷப் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை ஜவஹர் நகரை சேர்ந்தவர் ஜான் ஆரோக்கியதாஸ். ரிலையன்ஸ் டீசல் மற்றும் பவர் அக்ஸசரீஸ் நிறுவன ஊழியர். இவர் மதுரை 6-வது ஜூடிசியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை புதூர் ரட்சண்யபுரத்தில் உள்ள 7 ஏக்கர் நிலத்தில் பல் மருத்துவம் மற்றும் கலைக்கல்லூரி கட்ட புதூர் சிஎஸ்ஐ சர்ச் சார்பில் டெண்டர் கோரப்பட்டது. இதற்காக டயோசிஸ் சர்ச் நிர்வாகிகளிடம் ரிலையன்ஸ் சார்பில் ரூ. 20 லட்சம் டெண்டர் செலுத்தப்பட்டது.
ஆனால் அந்த டெண்டரை வேறொரு நிறுவனத்துக்கு கொடுத்து விட்டனர். நாங்கள் செலுத்திய டெண்டர் தொகையை திரும்ப பெறக்கோரி மிரட்டுகின்றனர்.
எனவே மிரட்டலில் ஈடுபட்ட சிஎஸ்ஐ பிஷப் கிறிஸ்டோபர், சர்ச் சொத்து அலுவலர் ஜான்சன், சென்டர் அலுவலர் பாபின் சத்தியமூர்த்தி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந் நிலையில் புதூர் போலீசார் சிஎஸ்ஐ பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர், ஜான்ஜன், பாபின் சத்திய மூர்த்தி ஆகியோர் மீது மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர்.