செப். முதல் சென்னை விமான நிலைய விரிவாக்க பணி
டெல்லி: கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையங்களை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி அடுத்த மாத இறுதியில் தொடங்குகிறது.
டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் 3வது விமான ஓடுபாதை நேற்று திறக்கப்பட்டது. ரூ.1,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஓடுபாதை ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் புறப்பட்டு பின்னர் தரையிறங்கியது.
அப்போது இருபுறத்திலும் தண்ணீர் பீய்ச்சியடித்து அந்த விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய 3வது விமான ஓடுபாதையினால், புறப்படும் விமானங்களும், தரையிறங்கும் விமானங்களும் மோதி கொள்ளும் சம்பவங்கள் இனி இருக்காது. இந்த விழாவில் கலந்து கொண்ட விமானத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் கூறியதாவது
கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்புப் பணி அடுத்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும். இதற்காக ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜிதம் செய்வதில் பிரச்சனை நிலவி வருகிறது. அது அந்த மாநிலத்தின் பிரச்சனை. விரிவாக்கத்தை செயல்படுத்த வேண்டுமானால் மாநில அரசுதான் நிலத்தை பெற்றுத் தர வேண்டும். அதையும் சீக்கிரம் பெற்றுத் தந்தால்தான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்ப முடியும்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் பயணிகள் மேம்பாட்டுக்காக கட்டணம் வசூலிக்க தனியார்களை அரசு அனுமதித்தது. அதேபோல பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திலும் கொண்டு வர பரிசீலித்து வருகிறோம். அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன் சாதக பாதகங்களை ஆய்வு செய்வோம்.
இது தொடர்பாக விமானத்துறை செயலாளர் அஷோக் சாவ்லா பெங்களூர் விமான நிலையத்தில் சமீபத்தில் ஆய்வு செய்தார். டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக கோரிக்கை அமைச்சகத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக சட்டப்பூர்வமாக முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications