For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முரண்பாடே.. உன் பெயர் தான் மத்திய அரசா?-பாஜக

By Staff
Google Oneindia Tamil News

Ganesan
சென்னை: ராமர் பால விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியும் மத்திய அரசும் முன்னுக்குப்பின் முரணாக கருத்துக்களை கூறி வருவதாக பாஜக மாநில தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் பேசிய முரண்பாடான கருத்துக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

'ராமன் ஒரு கற்பனை பாத்திரம். நான் கூட எத்தனையோ திரைப் படங்களுக்கு கதை எழுதியுள்ளேன். அவற்றின் கதாநாயகன் போலத்தான் வால்மீகி எழுதிய கதையின் நாயகன் ராமன்' என்று பேசியவர் கருணாநிதி.

அவரே வேறொரு கூட்டத்தில் பேசும்போது, நமது வீட்டுப் பெண்கள் பிரசவத்துக்கு தாய் வீட்டுக்குத் தானே செல்வார்கள். கௌசல்யாவின் நாடு கோசலை. எனவே அங்குதான் ராமர் பிறந்திருக்க வேண்டும். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது ஏற்புடையதல்ல என்றார்.

சென்னையில் திரைப்படங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் ராமர் பாலம் குறித்து ரஜினி பேசினார். அதற்கு பதிலளித்த கருணாநிதி, எனக்கு ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன் புத்தகத்தில் இருவரிகள் மிகவும் பிடிக்கும்.

அவை, ராமன் மனிதனாக பிறந்தவன் தனது திறத்தினாலே போற்றப்பட்டவன். அவன் அவதாரம் அல்ல.
வேறொரு விழாவில் அவர் தனது வாதத்துக்கு ஆதரவாக மேற்கொள் காட்டி பேசுவதாக நினைத்து தனக்கு எதிராக தானே பேசியது. பாரதி கூட சிங்களத் தீவுனுக்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.

ராமர் பாலம் குறித்து தமிழ் இலக்கியங்கள் தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், கம்பராமாயணம், ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டம், திருச்செந்தூர் தல புராணம், திருநாகை காரோணப் புராணம், கூர்ம புராணம், பெருந்தேவனார் பாரதம், ராமோதந்தம், குடந்தை அந்தாதி, உபதேச காண்டம், காளமேகப் புலவர் பாடல், திருப்புல்லாணி மாலை, வடமாலை வெண்பா, சிவசிவ வெண்பா, தீர்த்தகிரிப் புராணம், புன்னிருக்கு வேறார் புராணம், சூதவன புராணம், குசலோபாக்கியானம், சேது புராணம், திருவேங்கடத்தல புராணம், ராமாயண வெண்பா, அகநானூறு, பாரதியார் பாடல்கள், மணிமேகலை, அஷ்டப் பிரபந்தம் ஆகிய எல்லாம் ராமர் பாலம் குறித்து சிறப்பாக போற்றியுள்ளன.

கடந்த காலத்தை உயிரோட்டத்துடன் காண எனத் தலைப்பிட்டு ஒரு விளம்பரம். ராமர், லட்சுமணன் முன்னிலையில் அவரது படைகள் கற்களை சுமந்து கடலில் பாலம் அமைப்பது போன்ற காட்சி ஓவியமாக வரைந்து கீழே, 'ராமபிரானின் தாமரைப் பாதங்களின் ஆசிகளை இன்னமும் இந்தத் தண்ணீர் தாங்கி நிற்கின்றது'.

'வானர சேனை இலங்கைக்குச் சென்று சீதையை காப்பாற்ற கடலை கடந்த இடம் இதுதான்' என்கின்ற வாசகங்கள் இந்த விளம்பரத்தை தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது.

ராமர் பாலம் குறித்த விவரங்கள் ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் உள்ளது. அதன் முன்னுரை, 'இது ஒரு வழிகாட்டி ஏடு அல்லது தகவல் குறிப்பு மட்டுமல்ல; மேற்கோள் நூலாக பயன்படத்தக்கது' என்று எழுதியுள்ளது. 1972ல் இதை எழுதியவர் அன்றைய முதல்வர் கருணாநிதி.

ராமரே இல்லை என்றார்கள். ராமர், பாலத்தை கட்டவேயில்லை என்றார்கள். தற்போது இல்லாத ராமர், பிறக்காத ராமர், தான் கட்டாத பாலத்தை தானே இடித்து விட்டார் என்கிறார்கள். முரண்பாடே.. உன் பெயர் தான் மத்திய அரசா? என்று வியக்கத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X