சுனாமி நிதி சுருட்டிய சிங்களர்களிடம் நிவாரணம் கொடுப்பதா?-விஜயகாந்த்
சென்னை: போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்காக இந்திய அரசு மற்றும் தமிழக அரசுகள் கொடுக்கும் நிதி மற்றும் நிவாரண உதவிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களைச் சென்று சேர வேண்டுமே ஒழிய, இலங்கை அரசிடம் கொடுக்கப்படக்கூடாது என தேமுதிக தலைவர் விஜய்காந்த கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு தரப்பினரும் பலவகையான உதவிகளை திரட்டி தமிழக அரசிடம் தருகின்றனர். இந்த உதவிகள் உண்மையில், மரணப் படுக்கையில் உள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு போய்ச் சேருமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் இங்கு திரட்டப்படும் உதவிகளை ராஜபக்சேவிடம் தருவதைவிட, கடலில் கொட்டுவதோ அல்லது தீ வைத்து கொளுத்தி விடுவதோ நல்லதாக இருக்கும் என கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமி வந்தபோது, உலகம் முழுவதும் இருந்து வந்த நிதியை இலங்கை அரசே வைத்துக் கொண்டது. பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு நிவாரணம் சென்று அடையவில்லை.
எனவே, சுனாமி நிதியையே சுருட்டியவர்களிடம் நாம் அளிக்கும் உதவி, யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போகாது.
இலங்கை அரசின் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் அங்குள்ள தூதரகத்தின் மேற்பார்வையில் தமிழ் மக்களுக்கு நேரில் கொடுக்கவேண்டும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செஞ்சிலுவை சங்கம் மூலமாகவோ அல்லது ஐ.நா. சபையின் மூலமாகவோ வழங்கச் செய்ய வேண்டும்.
இலங்கை தமிழர்கள் மரண பயத்தில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இன்றியமையாத தேவை முதலில் போர் நிறுத்தம்தான்.
தமிழக மக்களின் சார்பில் இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டிய தமிழக முதல்வர் தனது ஆட்சியையும், அரசியல் கூட்டணியை தக்கவைத்துக் கொள்ள தமிழர் நலன்களை கைவிடலாமா என்பதே என் கேள்வி என்று விஜய்காந்த் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications