ஹைதராபாத் கல்லூரியின் ஐடியை போலியாக பயன்படுத்திய கஸாப்
ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் ஐடி கார்டை போலியாக பயன்படுத்தியுள்ளான் மும்பையில் சிக்கிய பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் இமான் கஸாப் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள தில்சுக்நகரில் உள்ளது அருணோதயா டிகிரி கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஐடி கார்டைத்தான் கஸாப் போலியாக தயாரித்து பயன்படுத்தியுள்ளான் என்பதை மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கல்லூரி சாய் பாபா கோவில் அருகே உள்ளது. கல்லூரி அமைந்துள்ள தில்சுக் நகர் பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கஸாப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐடி கார்டில், அருணோதயா கல்லூரியின் பெயரும், நகோல் பகுதியைச் சேர்ந்த நரேஷ் வர்மா என்ற பெயரில் இந்த ஐடி கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸாரிடம் கேட்டதற்கு, எங்களுக்கு இதுவரை தகவல் எதுவும் இல்லை. நாங்களும் மீடியா செய்தியின் மூலமாகத்தான் இதுகுறித்து அறிந்து கொண்டோம் என்றனர்.
அருணோதயா கல்லூரியின் முதல்வர் ராதாகிருஷ்ணா இதுகுறித்துக் கூறுகையில், நரேஷ் வர்மா என்பவரின் பெயருக்கு எங்களது கல்லூரியிலிருந்து ஐடி கார்டு எதுவும் விநியோகிக்கப்படவில்லை என்று மறுத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நரேஷ் வர்மா என்ற பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஐடி கார்டும் நாங்கள் வழங்கவில்லை. எங்களது ரெக்கார்டுகள் அதை தெளிவுபடுத்துகின்றன. அந்தப் பெயரில் எந்த மாணவரும் இங்கு பயிலவில்லை என்றார்.
எனவே கஸாப் வைத்திருந்தது போலியான ஐடி கார்டு என்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் கஸாப்புக்கு ஹைதராபாத்தில் ஆட்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications