For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் காங்; வால்பாறையில் திமுக வெற்றி

By Sridhar L
Google Oneindia Tamil News

கோவை: உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை 62வது வார்டில் காங்கிரசும், வால்பாறை 4வது வார்டில் திமுகவும் வெற்றி பெற்றன.

தமிழ்நாட்டில் காலியாக இருந்த கோவை மாநகராட்சி 62வது வார்டு, வால்பாறை 4வது வார்டு உள்ளி்ட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை மாநகராட்சி 62-வது வார்டு இடைத்தேர்தலுக்கு மேயர் வெங்கடாசலத்தின் மகள் காயத்ரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து கொங்கு நாடு முன்னேற்ற பேரவையின் அழகம்மாள் மற்றும் மரணம் அடைந்த முன்னாள் கவுன்சிலரின் மருமகள் சந்திரா ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் 50 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.

ஓட்டுகள் இன்று காலை ஆர்எஸ்புரம் எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பள்ளியில் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் காயத்ரி 2,364 ஓட்டுகள் பெற்று 925 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அழகம்மாள் 1,439 ஓட்டுகளும், சந்திரா 457 ஓட்டுகளும் பெற்றனர். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் காங்கிரஸ் வேட்பாளர் காயத்ரிக்கு வெற்றி சான்றிதழை வழங்கினர்.

வால்பாறை நகரசபை 16-வது வார்டு இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இங்கு திமுக வேட்பாளருக்கு 795 ஓட்டுகளும், இரண்டாவது இடம் பிடித்த சுயேட்சை வேட்பாளர் வீரமணிக்கு 278 ஓட்டுகளும் கிடைத்தன. மற்றொரு சுயேட்சை வேட்பாளர் முருகவேல் 252 ஓட்டுக்களுடன் மூன்றாவது இடம்பிடித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சி 4-வது வார்டில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் குமரேசன் வெற்றி பெற்றார். அவருக்கு 316 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் நடராஜனுக்கு 170 ஓட்டுகளும் கிடைத்தன. கம்யூனிஸ்ட் வேட்பாளர் மனோகரனுக்கு 52 ஓட்டுகளும் கிடைத்தன.

ஆனைமலை அருகே உள்ள மாரப்பகவுண்டன் புதூர் பஞ்சாயத்து 3-வது வார்டில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக ஆதரவில் சுயேட்சையாக போட்டியிட்ட முருகானந்தம் 236 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து கொங்கு நாடு முன்னேற்ற பேரவையின் ஆதரவில் சுயேச்சையாக போட்டியிட்ட பழனி சாமிக்கு 117 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X