For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மத்திய அரசுக்கு நிகராக தமிழக அரசும் தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரி சுதந்திர போராட்ட தியாகிகள் வரும் 18ம் தேதி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலவாழ்வு இயக்கம் மற்றும் வாரிசுகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 18ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில தலைவர் என்.துரை தலைமை வகிக்கிறார்.

தியாகிகள் நல சங்க தஞ்சாவூர் மாவட்ட தலைவர் வலம்புரித்தேவர், சென்னை மாவட்ட தலைவர் ஆண்டியப்பன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொன்னையா பிள்ளை, நெல்லை மாவட்ட தலைவர் சாவடி சொக்கலிங்கம், சென்னை மாவட்ட பொது செயலாளர் குருமூர்த்தி, தேனீ மாவட்டம் கதிரய கவுடர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ஈமசடங்கு தொகையை உயர்த்த வேண்டும்...

அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத்தை போல் தமிழக அரசும் வழங்கிட கோரியும், மத்திய அரசு பென்சன் வாங்கும் தியாகிகள் இறந்தால் அதே ஓய்வூதியத்தை அவர்களது மனைவிமார்களுக்கு வழங்குவது போல் தமிழக அரசும் வழங்கிடவும், ஈமசடங்கு தொகை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

தியாகிகளின் வயது, முதுமை கருதி அவசர கால மருத்துவ சிகிச்சைக்காக தனியார் ம்ருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் முழு மருத்துவ செலவையும், மத்திய-மாநில அரசுகள் ஏற்கவும் தியாகிகள் அவரது வாரிசுகளின் நலன் கருதி காமராசர் மத்திய அரசு இசைவுடன் இட்ட மாநில அரசாணை 1430ஐ உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

முன்னாள் படைவீரர்கள் குடும்பத்திற்கு கல்வி உதவித் தொகை வழங்கிட வருமான வரம்பிலிருந்து விலக்களி்த்திருப்பது போல் தியாகிகளுக்கு விலக்கு அளிக்க கோரியும், தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

தியாகிகளின் வாரிசுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடஓதுக்கீடு வழங்கிடவும், தியாகிகள் குடும்ப நல வாரியம் அமைக்கவும், வீட்டு மனை பட்டா, இரண்டு ஏக்கல் நிலம், அரசு மருத்துவமனைகளில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை அரசு விழாவாகவும், விடுமுறை நாளாகவும் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடக்கவிருக்கிறது.

இதை சென்னை தியாகிகள் வாரிசுகள் சங்க துணை தலைவர் சந்திரன் துவங்கி வைத்து பேசுகிறார்.

தியாகிகள் வாரிசுகள் சங்க மாநில தலைவர் தவசிமுத்து, வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில பொது செயலாளர் ஜெயசீலன், தமிழ்நாடு காமராசர் பாசறை தலைவர் அய்யப்பன், ஆகியோர் கோரிக்கை விளக்க உறையாற்றுகின்றனர். கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஏராளமானோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

தேசிய மனித உரிமை, நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்க தேசிய பொது செயலாளர் சுந்தரேசன் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார். தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில செயலாளர் கதிரேசன் நன்றி தெரிவிக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X