For Daily Alerts
Just In
தங்கம் விலை மேலும் உயர்வு: சவரன் ரூ.11,792!

கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்தபாடில்லை. பண்டிகை தினங்கள் நெருங்க, நெருங்க தங்கத்தின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,467ஆக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.11,736-க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 அதிகரித்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,474 ஆகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.11,792 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.