For Daily Alerts
Just In
மேலும் 2 யு.எஸ். வங்கிகள் திவால்-இதுவரை 94 காலி

பொருளாதாரம் ஒருபக்கம் லேசான முன்னேற்றத்தைக் காட்டி வரும் நிலையில் மறுபக்கம் வங்கிகள் சரிவது தொடர் கதையாகவே உள்ளது.
கடந்த 9 மாதங்களில் (அதாவது இந்த ஆண்டில்) மட்டும் இதுவரை 94 வங்கிகள் சுருண்டு விட்டன. மாதத்திற்கு 9 வங்கிகள் என திவால் நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லெஹ்மான் பிரதர்ஸ் நிறுவனம் திவாலாகி வீழ்ந்ததைத் தொடர்ந்து இதுவரை மொத்தம் 109 வங்கிகள் காலியாகியுள்ளன.
கடந்த 18ம் தேதி லூயிஸ்வில்லி இர்வின் யூனியன் வங்கி, கொலம்பஸ் இர்வின் யூனியன் வங்கி மற்றும் டிரஸ்ட் கம்பெனி ஆகிய இரு வங்கிகள் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
திவாலான வங்கிகளின் எண்ணிக்கை செஞ்சுரியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதால் அமெரிக்க வங்கிகள் கவலையில் உள்ளன.