சென்னையில் பட்டம் விட போலீஸ் தடை

இது குறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்,
சென்னையில் மாஞ்சா நூலுடன் காற்றாடி பறக்கவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழல்கள் உருவாகின்றன.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களின் கழுத்தில் காற்றாடி நூல் சிக்கி, கழுத்து அறுபடுவது உள்ளிட்ட விபத்துகள் நடக்கின்றன.
மேலும், அறுந்து விழும் காற்றாடியை பிடிக்க முயல்வோர் கண்மூடித்தனமாக சாலையை கடப்பதாலும், உயர் அழுத்த மின் கம்பங்களில் சிக்கும் காற்றாடியை எடுக்க முயல்வோர் மின் கம்பங்களில் ஏறுவதாலும் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.
மின் கம்பங்களில் காற்றாடிகள் சிக்குவதால் மின் தடையும் ஏற்படுகின்றன. இதனால் காற்றாடி விடுவதை தவிர்க்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
காற்றாடி பறக்கவிடுவது சென்னை மாநகர காவல் சட்டப்படி குற்றமாகும். இதை மீறி காற்றாடி பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.